டெங்கி நோயால் இவ்வாண்டில் ஐந்தாவது நபர் மரணம்

டெங்கி நோயால் இவ்வாண்டில் ஐந்தாவது நபர் மரணம்

1 mins read
40f80785-5030-4ddf-9c94-f06bee2068b1
-

கேலாங் லோரோங் 6ல் வசித்திருந்த 84 வயது மூதாட்டி, டெங்கி நோயால் மாண்ட ஐந்தாவது நபர் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ( ஜூன் 14ஆம் தேதி) உயிரிழந்த அவர், அந்த வட்டாரத்தில் டெங்கி தொற்றிய எட்டுப் பேரில் ஒருவர்.

இவ்வாண்டிலேயே 5,400 பேருக்கும் அதிகமானோர் டெங்கியால் மடிந்தனர். இந்த எண்ணிக்கை, கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்திற்கான நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கையைவிட நான்கு மடங்கு அதிகம். டெங்கி நோயால் இவ்வாண்டு மாண்ட அனைவரும் வயதானவர்கள். அவர்களில் மூவர் 70 வயது மதிக்கத்தக்கவர்கள். நான்காமவருக்கு 63 வயது.

"டெங்கி நோய்ப்பரவலுக்கு மத்தியில் இப்போது நாம் எல்லோரும் இருக்கிறோம் என்பது தெளிவாக உள்ளது," என்று தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொற்றுநோய் ஆய்வுத்திட்டத்தை வழிநடத்தும் பேராசிரியர் ஹ்சு லி யாங் தெரிவித்தார்.