சிங்கப்பூரும் இந்தியாவும் அவற் றுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மறுஉறுதிப்படுத்தி உள்ளன.
அதோடு, பொருளியல் ஒத்து ழைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை இரு நாடுகளும் ஆராய்ந்து வருகின்றன.
வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் இந்தியத் தலைநகர் புதுடெல்லிக்கு சென்றார். அவரது பயணத்தை முன்னிட்டு வர்த்தக, தொழில் அமைச்சு நேற்று வெளியிட்ட செய்தி அறிக்கையில் மேற்கூறப் பட்ட விவரங்கள் தெரிவிக்கப் பட்டன.
வர்த்தகம், முதலீடு, ஆகாய தளவாடத் தொடர்பு, அறிவார்ந்த நகர மேம்பாடு உள்ளிட்ட அம்சங் களில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான கடப் பாட்டை இரு நாடுகளும் கொண்டு உள்ளதாக திரு ஈஸ்வரன் சொன்னார்.
"மின்னிலக்கப் பொருளியல் வளர்ச்சியையொட்டி இருதரப்பு முயற்சிகளுக்கு மின்னிலக்கத் தொடர்பு வளர்ச்சி, வாய்ப்புகள் மிக்க புதிய அம்சமாக விளங்கு கிறது.
"ஆசிய வட்டாரத்திற்குள் பொருளியல் ஈடுபாட்டை வலுப் படுத்தவும் இரு நாடுகள் இணைந்து பணியாற்றலாம். நமது மக்களுக்கும் வர்த்தகங்களுக்கும் கூடுதலான வாய்ப்புகளை வழங்க இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே ஒத்துப்போகக்கூடிய பல ஆற்றல்கள் உள்ளன," என்றார் அமைச்சர்.
சிங்கப்பூரின் முக்கிய வர்த்தகப் பங்காளிகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. இருதரப்பு ஒட்டு மொத்த வர்த்தகத்தின் மதிப்பு கடந்த ஆண்டு S$26.4 பில்லிய னாகப் பதிவானது.
கடந்த பத்தாண்டு கால கட்டத்தில் இந்தியாவில் சிங்கப்பூர் செய்துள்ள முதலீடும் வேகமாக அதிகரித்துள்ளது. கடந்த நிதி ஆண்டில் இந்தியாவின் ஆகப் பெரிய முதலீட்டாளராக சிங்கப்பூர் திகழ்ந்தது.

