தவறிழைக்கும் 'பிஎம்டி' பயனாளர்களுக்கு எதிராக செயலி மூலம் புகார் அளிக்கலாம்

தவறிழைக்கும் 'பிஎம்டி' பயனாளர்களுக்கு எதிராக செயலி மூலம் புகார் அளிக்கலாம்

2 mins read
bf7d8199-c79a-4337-91ae-8f5fd29e0c52
PHOTO: LIANHE ZAOBAO -

தவறிழைக்கும் தனிநபர் நடமாட்டச் சாதனப் (பிஎம்டி) பயனாளர்களுக்கு எதிராக புகார் அளிக்க பொது மக்கள் இனி MyTransport.SG செயலியைப் (படம்) பயன்படுத்த

லாம் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று தெரிவித்தது.

தங்கள் தனிநபர் நடமாட்டச் சாதனங்களைப் பயனாளர் நிலப் போக்குவரத்து ஆணையத்துடன் பதிந்துகொள்ள இறுதிநாளான ஜூலை மாதம் 1ஆம் தேதி நெருங் கிக்கொண்டிருக்கும் வேளையில் ஆணையத்தின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

முன்பிருந்த செயலியில் புகார் கொடுக்கும் புதிய அம்சங்கள் இப் போது சேர்க்கப்பட்டு வருகிறது என்று கூறிய ஆணையம், தனது இணையத்தளத்தில் தவறிழைக் கும் பயனாளர்கள் பற்றி கிடைத்த புகார்களின் அடிப்படையில் அம லாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட் டுள்ளன என்றும் தெரிவித்தது.

இதுவரை 75,000க்கும் மேற் பட்ட மின்ஸ்கூட்டர் பயனாளர்கள் ஆணையத்துடன் தங்களைப் பதிந்துகொண்டுள்ளார்கள்.

வரும் ஜூலை 1ஆம் தேதி முதல், பதிவு செய்யாத 'பிஎம்டி' சாதனங்களைப் பொதுப் பாதை களில் பயன்படுத்துவோர் சட் டத்தை மீறியதாக எடுத்துக்கொள் ளப்படும்.

பதிவு செய்வோருக்குக் குறைந் தது 16 வயது இருக்க வேண்டும். அவர்கள் பயன்படுத்தும் மின் ஸ்கூட்டரின் எடை 20 கிலோ கிராமை தாண்டவில்லை என்றும் அதன் குறுக்களவு 70 சென்டி மீட்டருக்குள் உள்ளது என்றும் உறுதி செய்ய வேண்டும்.

அந்த மின்ஸ்கூட்டரின் வேகம் மணிக்கு 25 கிலோ மீட்டரைத் தாண்டக்கூடாது.

தனிநபர் நடமாட்டக் கருவி களைப் பதிவு செய்யும் இத்திட் டத்தின் மூலம், முறைகேடாக தங் கள் சாதனங்களைப் பயன்படுத்து வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் பாதைகளைப் பயன் படுத்துவோரின் பாதுகாப்பை மேம் படுத்தவும் முடியும் என்றும் ஆணையம் குறிப்பிட்டது.

தங்கள் நடமாட்டச் சாதனங் களைப் பதிவு செய்யாமல் பொதுப் பாதையில் அவற்றைப் பயன்படுத்து வோருக்கு $2,000 வரை அப ராதமும் முதல் குற்றத்துக்கு மூன்று மாதங்கள் வரையிலான சிறைத் தண்டனையும் விதிக்கப்பட லாம்.

நேற்று வெளியிட்ட தனது அறிக்கையில் 'பிஎம்டி' பயனாளர் களும் விற்பனையாளர்களும் UL2272 சான்றிதழ் பெற்ற சாதனங்களை வைத்திருக்க வேண்டும் என்று ஆணையம் நினைவூட்டியது. இந்தச் சான்றிதழ் பொதுப் பாதுகாப்பை மேம்படுத்தவும் தீச் சம்பவங்களைத் தவிர்க்கவும் உத வும் என்றும் ஆணையம் கூறியது.