அதிபர் ஹலிமா:சமய ஒற்றுமையைக் காப்பது முக்கிய கடப்பாடு

அதிபர் ஹலிமா:சமய ஒற்றுமையைக் காப்பது முக்கிய கடப்பாடு

2 mins read
7a689b7f-3361-44b0-8cd3-f8e78f85526b
அனைத்துலக பிணைப்புமிக்க சமூகங்கள் மாநாட்டில் நேற்று பங்கேற்ற ஜோர்தான் மன்னர் அப்துல்லாவும் (இடமிருந்து 4வது), அதிபர் ஹலிமா யாக்கோப்பும் (வலமிருந்து 3வது). படம்: ஏஎஃப்பி -

உலகம் முழுவதும் பல இனங் களுக்கும் இடையில் பதற்றம் கூடி வருவதைக் கருத்தில்கொண்டு பார்க்கையில் சமய நல்லிணக் கத்தைக் கட்டிக்காக்க வேண்டும் என்ற கடப்பாடு மிக முக்கியமான தாக இருக்கிறது என்று அதிபர் ஹலிமா யாக்கோப் தெரிவித்து இருக்கிறார்.

'அனைத்துலக பிணைப்புமிக்க சமூகங்கள் மாநாடு' என்ற மூன்று நாள் மாநாடு புதன்கிழமை சிங்கப் பூரில் தொடங்கியது.

அதில் கலந்துகொண்ட 250க்கும் மேற்பட்ட சமய அமைப்பு களைச் சேர்ந்த பேராளர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

சமயங்களுக்கு இடையில் மிக வலுவான பிணைப்பை உருவாக்கப் போவதாக அவர்கள் ஏழு அம்ச கடப்பாடு ஒன்றை உறுதிபடத் தெரிவித்தனர்.

நெருக்கடி காலத்தின்போது ஒற்றுமையை நிலைநாட்டுவதும், சமய சுதந்திரத்தைக் கட்டிக்காப் பதும் அந்தப் பேராளர்கள் அளித்த உறுதியில் அடங்கும்.

மாநாட்டில் பேராளர்கள் தெரி வித்த கடப்பாடு பற்றி கருத்துக் கூறிய அதிபர், இது வெறும் அறிக்கை அல்ல என்றும் தங்க ளுடைய சொந்த சமயத்தினரிடையே சமயத் தலைவர்கள் இதையே சாதிக்க விரும்புகிறார்கள் என்ப தால் இது மிகவும் முக்கியமானது என்றும் குறிப்பிட்டார்.

ராஃபிள்ஸ் சிட்டி மாநாட்டு மையத்தில் நடக்கும் அந்த மாநாட்டையொட்டி செய்தியாளர் களிடம் பேசிய அதிபர், சிங்கப் பூரில் சமயங்களுக்கு அப்பாலும் பள்ளிகளிலும் வேலையிடங்களி லும் இந்தக் கடப்பாட்டின் மூலம் அமைதியும் நல்லிணக்கமும் உறுதிபடும் என்று தாம் நம்புவ தாகவும் தெரிவித்தார்.

"இத்தகைய கடப்பாட்டை சமயத்தினரிடையே மட்டுமல்லாமல் சமூகம் போன்ற இதர பலவற்றிலும் நாம் பயன்படுத்தலாம். பிணைப்புமிக்க சமூகத்தை வலுப்படுத்த இதை நாம் பயன்படுத்த முடியும்.

"பள்ளிக்கூடங்களிலும் வேலை இடங்களிலும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட முடியும். இதையே நாம் விரும் புகிறோம்," என்று அதிபர் கூறினார்.