சிங்கப்பூர்விமானிகளின் திறன்களை பிரான்ஸ் பயிற்சி மேம்படுத்துகிறது

தற்காப்பு மூத்த துணை அமைச் சர் ஹெங் சீ ஹாவ், பிரான்சில் சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையினர் உள்ள தளத்திற்குச் சென்றார். பிரான்சில் சிங்கப்பூர் விமானிகள் பயிற்சி பெறுவதால் ஏற்படக்கூடிய அனுகூலங்களை அவர் விளக்கினார்.

கசாக்ஸ் விமானத் தளத்திற் குச் சென்ற அமைச்சர், பிரஞ்சு விமானப் படை போன்ற நிபுணத் துவ ஆற்றலுடன் கூடிய படை யுடன் சேர்ந்து பயிற்சி பெறுவதன் மூலம் சிங்கப்பூர் விமானிகள் அதிநவீன தொழில்நுட்பங்

களைக் கற்றுக்கொள்ள முடி கிறது என்று தெரிவித்தார்.

சிங்கப்பூருக்கும் பிரான்சுக் கும் இடைப்பட்ட ராணுவப் பங் காளித்துவ உறவின் ஒரு பகுதி யாக குடியரசின் ஆகாயப் படை யினர் பிரான்சில் பயிற்சி பெற்று வருகின்றனர் என்பதை அமைச் சர் சுட்டினார்.

தன் விமானிகளுக்குப் பயிற்சியளிக்கும் வல்லமையுடன் கூடிய வலுவான விமானப்படை

யும் சேர்ந்ததுதான் வலுவான ஆற்றல்மிக்க தற்காப்புப் படை என்றார் அவர்.

சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படை 1998 முதல் பிரான்சில் பயிற்சி பெற்று வருகிறது.

பிரான்சின் ஆயுதப்படை அமைச்சின் அழைப்பை ஏற்று அங்கு சென்றுள்ள திரு ஹெங், திங்கட்கிழமை தொடங்கிய 53வது அனைத்துலக பாரிஸ் விமானக் காட்சியையும் பார்வை யிட்டார். அதையொட்டி பிரான்ஸ் நாட்டின் ஆயுதப்படை துணை அமைச்சரையும் சந்தித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!