மேம்பாலக் கட்டுமானப் பணிக்காக ஜூன் 27ஆம் தேதி சாலை மூடல்

மேம்பாலக் கட்டுமானப் பணிக்காக ஜூன் 27ஆம் தேதி சாலை மூடல்

1 mins read

செங்காங் ஈஸ்ட் வே சாலையில் புதிய மேம்பாலத்தின் கட்டுமானப் பணிக்காக இம்மாதம் 27ஆம் தேதி அச்சாலை யின் ஒரு பகுதி போக்குவரத்துக்குத் தற்காலிகமாக மூடப்படும். செங்காங் ஈஸ்ட் வேக்கும், செங்காங் ஈஸ்ட் ரோட்டுக்கும் இடைப்பட்ட சந்திப்பிலிருந்து செங்காங் ஈஸ்ட் வேக்கும் ஆங்கர்வேல் லிங்குக்கும் இடைப்பட்ட சந்திப்பு வரையிலான சாலை 26ஆம் தேதி பின்னிரவு 1 மணி முதல் 27ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை மூடப்பட்டிருக்கும்.

அடுத்த ஆண்டு மூன்றாம் காலாண்டில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து இந்தப் புதிய மேம்பாலம் திறக்கப் பட்டதும் அதன் மூலம் குடியிருப்பாளர்கள் செங்காங் ஈஸ்ட் வே பகுதிக்குச் சென்று அங்குள்ள வசதிகளைப் பயன்படுத் திக்கொள்ளலாம் என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் கூறியது. சாலை மூடலின்போது வாகனமோட்டிகள் எடுக்க வேண்டிய மாற்று வழிகள் பற்றிய அறிவிப்புப் பலகைகள் அந்தப் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும்.