ஆசியான் உச்சநிலைக் கூட்டம்; பேங்காக் செல்லும் பிரதமர் லீ

ஆசியான் உச்சநிலைக் கூட்டம்; பேங்காக் செல்லும் பிரதமர் லீ

1 mins read
a702bdd1-779a-485d-b212-80a8c04a91e5
-

தாய்லாந்தில் நடைபெறும் 34வது ஆசியான் உச்சநிலைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் நாளை அந்நாட்டின் தலைநகர் பேங்காக்கிற்குச் செல்லவுள்ளார். ஞாயிற்றுக்கிழமை வரை அவர் அங்கு இருப்பார்.

ஆசியானின் மையத்தன்மையையும் ஒற்றுமையையும் வலுப்படுத்துவதற்கான வழிகளை ஆராயவும் ஆசியானை முன்னெடுத்துச் செல்வது குறித்தும் ஆசியான் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இந்தச் சந்திப்பின்போது கலந்துரையாடுவர் என்று பிரதமர் அலுவலகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

மற்ற உலக நாடுகளுடனான உறவுகள் குறித்தும் ஆசியானின் பத்து தலைவர்களும் கலந்துரையாடுவர்.

பிரதமர் லீயின் பயணத்தின்போது துணைப்பிரதமர் ஹெங் சுவீ கியட் தற்காலிக பிரதமராகச் செயல்படுவார்.