ஈசூனின் பல்வேறு அடுக்குமாடி வீடுகளில் மின்சாரம் இன்று பிற்பகல் துண்டிக்கப்பட்டிருந்ததாக 'எஸ்பி' குழுமம் தெரிவித்திருக்கிறது.
ஃபர்ன்குரோவ், நீ சூன் ஈஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்சாரத் துண்டிப்பு ஏற்பட்டது பற்றி வாசகர்கள் தன்னிடம் தெரிவித்ததாக 'ஸ்டாம்ப்' இணையத்தளம் தெரிவித்திருக்கிறது.
இன்று பிற்பகல் 4.31 மணிக்கு ஏற்பட்ட துண்டிப்பால் பாதிக்கப்பட்ட இடங்களில் தனது அதிகாரிகளை உடனே அனுப்பியதாக 'எஸ்பி' குழுமம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது. மின்சார விநியோகத்தை மறுசீரமைப்பது தனது கடமை என்று குழுமம் கூறியது. சம்பவத்திற்கான காரணம் ஆராயப்படுவதாகவும் அந்தக் குழுமம் சொன்னது.

