இந்த ஆண்டுக்கான சிங்கப்பூர் விற்பனைத் திருவிழா நேற்று தொடங்கியதையடுத்து ஆர்ச்சர்ட் சாலைச் சந்திப்பில் 'ஃபேஷன் ஷோ' நடைபெற்றது. அதில் பங்கேற்றவர்கள் புதுவித வடிவமைப்பிலான பலவகை ஆடைகளை அணிந்து சாலைச் சந்திப்பில் ஒய்யார வலம் வந்தனர். அப்போது அந்தச் சந்திப்பில் சிலர் நடனமாடினர்.
ஆர்ச்சர்ட் ரோடு சாலைச் சந்திப்பை ஒரு பெரிய ஓடுதளமாக மாற்றியுள்ளது விற்பனைத் திருவிழா. 'ஜிஎஸ்எஸ்: எக்ஸ்பீரியன்ஸ் சிங்கப்பூர் 2019' எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தக் கண்காட்சியை அங்கிருந்தோர் திரண்டிருந்து வேடிக்கை பார்த்தனர். பலர் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். அடுத்த மாதம் 28ஆம் தேதி நிறைவுறும் விற்பனைத் திருவிழாவில் விலைக்குறைப்பு மட்டுமின்றி சாலைக்காட்சிகள், தற்காலிக கடைகள், திரைப்படம் போன்றவையும் இடம்பெறும். படம்: எஸ்பிஎச்

