ஆசியான் மாநாடு: பேங்காக்குக்கு செல்லும் பிரதமர்

ஆசியான் மாநாடு: பேங்காக்குக்கு செல்லும் பிரதமர்

1 mins read

பேங்காக்கில் நடைபெறும் 34வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் லீ சியன் லூங் இன்று பேங்காக் செல்கிறார். நாளைவரை பேங்காக்கில் இருக்கும் அவர், தென்கிழக்காசியத் தலைவர்களைச் சந்திப்பார் என்று கூறப்பட்டது. இவ்வாண்டு தாய்லாந்தில் நடைபெற இருக்கும் இரண்டு ஆசியான் கூட்டங்களில் இது முதலாவது.

ஆசியானை மையப்படுத்துதல் ஒருமைப்பாடு, ஆசியானை அடுத்த கட்டத்துக்கு இட்டுச் செல்வது ஆகியன பற்றி இந்தச் சந்திப்பின்போது தலைவர்கள் உரையாடுவர் என பிரதமர் அலுவலக அறிக்கை தெரிவித்தது.

வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், வர்த்தக, தொழில்துறை அமைச்சர் சான் சுன் சிங், இவ்விரு அமைச்சுகளின் அதிகாரிகள் ஆகியோரும் பிரதமருடன் செல்கின்றனர். இந்தச் சமயத்தில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தற்காலிகப் பிரதமராக இருப்பார்.