ஈஸ்வரன்: 'ஆர்சிஇபி' ஒப்பந்தம் வட்டாரத்தை ஒன்றிணைக்கும்

ஈஸ்வரன்: 'ஆர்சிஇபி' ஒப்பந்தம் வட்டாரத்தை ஒன்றிணைக்கும்

2 mins read
95ef3728-1304-40e8-b547-2bfaad611f83
(இடமிருந்து) இந்தியாவின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, தொடர்பு தகவல் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் ஆகியோர் பங்கேற்ற கருத்தரங்கை இந்தியத் தொழில்துறை வல்லுநர் தருண் தாஸ் வழிநடத்தினார். படம்: தெற்காசிய கல்வி ஆய்வுக் கழகம் -

தொலைநோக்குப் பார்வையுடனும் உயர்ந்த குறிக்கோள் கொண்ட ஒப்பந்தத்துடனும் ஆசிய வட்டா ரத்தை ஒன்றிணைக்க வட்டாரப் பரந்த பொருளியல் பங்காளித்துவ உடன்பாட்டால் (ஆர்சிஇபி) முடியும் என்று வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்த உடன்பாட்டில் ஒரு பகுதியாக இந்தியா இல்லாவிட்டால் அது இழப்பாக அமையும் என்று அவர் கூறினார்.

கடந்த புதன், வியாழன் ஆகிய தினங்களில் இந்தியத் தலைநகர் புதுடெல்லிக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்ட திரு ஈஸ்வரன், அங்கு வியாழக்கிழமை நடைபெற்ற சிங்கப்பூர் கருத் தரங்கில் உரையாற்றியபோது இதனைத் தெரிவித்தார்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் தெற்காசிய கல்வி ஆய்வுக் கழகமும் இந்திய தொழில்துறை சம்மேளனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்தக் கருத்தரங்கில் பேசிய திரு ஈஸ்வரன், "நமது வர்த்தகங் களுக்கும் மக்களுக்கும் வாய்ப்பு களை ஆர்சிஇபி வழங்கும்," என்றார்.

ஆசியானின் 10 உறுப்பு நாடுகள், இந்தியா, சீனா, ஆஸ்தி ரேலியா, நியூசிலாந்து, தென் கொரியா, ஜப்பான் ஆகிய 16 நாடுகளுக்கு இடையே பொருள், சேவை, முதலீடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இந்த தடை யற்ற வர்த்தக உடன்பாடான 'ஆர்சிஇபி'யில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

உலகின் ஒட்டுமொத்த உள் நாட்டு உற்பத்தியில் 30 விழுக் காட்டையும் உலக நாடுகளின் ஏற்றுமதிகளில் 25 விழுக்காட் டையும் இந்த ஒப்பந்தம் உள்ள டக்குகிறது.

ஆனால், இதற்கான பேச்சு வார்த்தைகளில் பலமுறை இழுபறி நீடித்து வந்துள்ளது.

சீனப் பொருட்கள் மீது விதிக் கப்படும் வரி குறைக்கப்படுவதால் இந்தியச் சந்தையில் சீனப் பொருட்கள் குவிவது இந்தியா வுக்குக் கவலையைத் தந்துள்ளது. இந்தியாவில் 2016-17 நிதி ஆண்டில் வர்த்தக உடன்பாடு $51 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது.

ஆர்சிஇபி உடன்பாட்டில் பங்கு பெறும் நாடுகளில் திறன் பெற்ற இந்திய ஊழியர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை வழங்குவது குறித்தும் புதுடெல்லி அக்கறை கொள்கிறது.

அதன் தொடர்பில் கருத்து ரைத்த திரு ஈஸ்வரன், "வர்த்தக ரீதியிலும் புவியியல் அரசியல் நோக்கிலும் பார்க்கையில் இத்த கைய உடன்பாட்டின் ஒரு அங்க மாக இருப்பது நன்மை பயக்குமா அல்லது அதைவிட்டு விலகி இருப்பது சிறந்ததா என்பது குறித்து இந்தியா சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

"ஆனால் இதன் ஒரு பகுதியாக இந்தியா இல்லாவிடில், அது ஒரு இழப்பாக அமையும் என நான் கருதுகிறேன்," என்றார்.

சிங்கப்பூரின் முக்கிய வர்த்தகப் பங்காளிகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது.

இருதரப்பு ஒட்டுமொத்த வர்த்த கத்தின் மதிப்பு கடந்த ஆண்டு S$26.4 பில்லியனாகப் பதிவா னது.

இந்தியாவும் சிங்கப்பூரும் இணைந்து செயல்படுவதற்கான பல்வேறு புதிய வாய்ப்புகளை மின்னிலக்கப் பொருளியல் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகத் திரு ஈஸ்வரன் கூறினார்.

(இடமிருந்து) இந்தியாவின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, தொடர்பு தகவல் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் ஆகியோர் பங்கேற்ற கருத்தரங்கை இந்தியத் தொழில்துறை வல்லுநர் தருண் தாஸ் வழிநடத்தினார். படம்: தெற்காசிய கல்வி ஆய்வுக் கழகம்2019-06-23 06:10:00 +0800