துணைப் பிரதமர்: வரலாற்றைச் செதுக்கிய பண்புநலன்கள் தேவை

வெளிப்படைத்தன்மை, கலாசார பன்முகத்தன்மை, சுய நிர்ணயம் ஆகிய மூன்று பண்புநலன்கள் கடந்த 700 ஆண்டுகளில் சிங்கப் பூரின் வரலாற்றைச் செதுக்கி உள்ளன. தொடர்ந்து நாட்டின் எதிர்காலத்திற்கு அவை முக்கிய மானவையாக உள்ளன.

‘அவர் தெம்பனிஸ் ஹப்’பில் நேற்று சிங்கப்பூர் இருநூற்றாண்டு சாலைக்காட்சியைத் தொடங்கி வைத்த துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் மேற்கண்ட கருத்தை முன்வைத்தார்.

“நமது தேசத்தின் உயிர்நாடி யாக வர்த்தகம் உள்ளது. நவீன தேசமாக நாம் செழித்தோங்கி, வெற்றி பெறுவதற்கு முக்கிய கார ணங்களில் ஒன்று நாம் வெளிப் படைத்தன்மையுடன் திகழ்ந்து மற்ற நாடுகளுடன் தொடர்பு கொண்டிருப்பதே,” என்று நிதி அமைச்சருமான திரு ஹெங் குறிப்பிட்டார்.

“நாம் எப்போதும் வெளிப்படைத் தன்மையுடன் இருப்பதால் பல்வேறு குழுக்கள், சமூகங்கள், தனி நபர்கள் சிங்கப்பூருக்கு வந்து நமது மேம்பாட்டிற்குப் பங்களித்து உள்ளனர். 14ஆம் நூற்றாண்டி லேயே பல இனத்தவர்களைக் கொண்ட சமுதாயமாக நாம் இருந்தோம்,” என்றார் அவர்.

சிங்கப்பூர் அதன் வரலாற்றில் பல்வேறு ஏற்ற இறக்கங்களைக் கண்டாலும் நாடு செழித்தோங்கு வதற்கு அது எப்போதும் ஒரு வழியைக் கண்டறியும் என்று அவர் சொன்னார்.

இம்மாதம் 30ஆம் தேதி வரை இந்தக் சாலைக்காட்சி இடம் பெறுகிறது. இருநூற்றாண்டு நிறைவைக் குறிக்கும் மொத்தம் ஐந்து சாலைக்காட்சிகளில் மூன்றாவதாக இது அமைகிறது. முதலாவது சாலைக்காட்சி ஏப்ரலில் விஸ்மா கேலாங் சிராயிலும் இரண் டாவது சாலைக்காட்சி கடந்த மாதம் தோ பாயோ ‘ஹெச்டிபி ஹப்’பிலும் நடைபெற்றன.

இரு சாலைக்காட்சிகளும் முறையே 6,500 மற்றும் 9,000 பேரை ஈர்த்தன. வரும் ஆகஸ்ட் வரை மாதந்தோறும் நடைபெறும் சாலைக்காட்சிகள் அடுத்ததாக ஈசூனில் உள்ள ‘நார்த்பாயிண்ட் சிட்டி’ கடைத்தொகுதிக்கும் சுவா சூ காங்கில் உள்ள ‘லாட் ஒன் ஷாப்பர்ஸ் மால்’ கடைத்தொகுதி யிலும் இடம்பெறும்.

சிங்போஸ்ட், கடல்துறை துறை முக ஆணையம், தேசிய நூலக வாரியம் ஆகியவற்றின் கூடங் களும் இந்தச் சாலைக்காட்சியில் இடம்பெற்றன.

சாலைக்காட்சியில் சிங்போஸ்ட் நிறுவனத்தின் 10 நினைவு அஞ்சல் தலைகளைத் திரு ஹெங் வெளி யிட்டார். சிங்கப்பூரின் 700 ஆண்டுகால பயணத்தின் முக்கிய மைல்கற்களை அந்த அஞ்சல் தலைகள் எடுத்துக்காட்டுகின்றன.

நேற்று முதல் அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் இந்த அஞ்சல்தலைகள் விற்ப னைக்குக் கிடைக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!