டெங்கி காய்ச்சலுக்கு எதிர்ப்பு சக்தி மக்களிடம் குறைவாக இருப்பது இவ்வாண்டு டெங்கி அதிகமானோருக்கு ஏற்படக் காரணமாக இருக்கலாம். குறிப் பாக, கொசு எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக இருப்ப தால், டெங்கி பாதிப்பு அதிக ரிக்கும் என்று உள்ளூர் சுகாதார, சுற்றுப்புறவியல் நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்.
ஆசியான் டெங்கி ஒழிப்பு தினத்தையொட்டி ஒரு வாரத் துக்கு முன்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய நிபுணர்கள் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு டெங்கி ஏற்படுவது குறித்து கவலை தெரிவித்தனர். இந்நோயினால் இவர்கள் அதிகம் பாதிக்கப்படுவ தாகக் கூறிய நிபுணர்கள், பொது வான அறி குறிகள் இவர்களிடம் காணப் படுவதில்லை என்றனர்.
இந்த ஆண்டு சிங்கப்பூரில் டெங்கியினால் ஐவர் உயிரிழந்து உள்ளனர். ஜூன் 17ஆம் தேதி வரையில் 5,261 பேருக்கு டெங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் டெங்கி பாதிப்பு 60% அதிகரித்து ள்ளது. தேசிய சுற்றுப்புற வாரி யத்தின் சுற்றுப்புற சுகாதார கழகத்தின் இயக்குநர் இணை பேராசிரியர் இங் லீ சிங், சிங்கப்பூரில் டெங்கி நோய் எதிர்ப்பு குறைவாக உள்ளது என்றும் கொசுக் கட்டுப்பாடு கடுமையாக இருப்பதால் பலர் இந்நோயினால் பாதிக்கப்பட வில்லை என்றும் கூறினார்.

