கேலாங் சிராய் 'ஹரிராயா' சந்தை: இரண்டு மில்லியன் பேர் வருகை

கேலாங் சிராய் 'ஹரிராயா' சந்தை: இரண்டு மில்லியன் பேர் வருகை

1 mins read
f8cdd294-9ede-4f4e-a0ec-8f3255551e14
-

இவ்வாண்டு கேலாங் சிராயில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் சந்தைக்கு சாதனை அளவாக இரண்டு மில்லியன் பேருக்கு மேல் வருகையளித்தனர். இது, 2018ஆம் ஆண்டின் 1.8 மில்லியன் பேருடன் ஒப்பிடு கையில் புதிய உச்சம் என்று சனிக்கிழமை அன்று நடைபெற்ற நோன்புப் பெருநாள் விருந்து நிகழ்ச்சியில் பேசிய தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் கூறினார். "ஹரிராயா சந்தை முழு வெற்றி" என்று குறிப்பிட்ட அவர், தனித்தன்மை வாய்ந்த கலாசாரத்தின் அடையாளமாக உருவாவதில் இந்த வட்டாரம் வெற்றி பெற்றுள்ளதை நோன்புப் பெருநாள் சந்தை காட்டுவதாகவும் தெரிவித்தார்.