வாம்போ டிரைவ் சுற்றுப்பாதைக்கு புதிய தோற்றம்: 'எல்டிஏ'

வாம்போ டிரைவ் சுற்றுப்பாதைக்கு புதிய தோற்றம்: 'எல்டிஏ'

1 mins read
6f1ddbc3-6558-4348-a382-3fc46a94fd38
-

வாம்போ டிரைவ் சுற்றுப் பாதை திறக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள்ளாகவே மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது. அந்த சுற்றுப்பாதை கண்ணுக்குப் புலப்படாத வகையில் இருப்பதாக வாகனமோட்டிகளில் பலர் குறை கூறியதைத் தொடர்ந்து அதற்கு புதிய தோற்றத்தை வழங்க நிலப் போக்குவரத்து ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதை அடுத்து உடனடியாக கட்டுமானப் பணிகள் தொடங்கப் பட்டுள்ளன. இம்மாதம் இறுதியில் பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூத்தோர் வட்டாரத் திட்டத்தின் ஓர் அங்கமாக, கடந்த மாதம் வாம்போ டிரைவ் சுற்றுப்பாதை திறக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் முதியோர் சாலைகளைப் பாதுகாப்பாகக் கடப்பற்கு ஏதுவாக வாகனங்கள் மெதுவாகச் செல்லும் வகையில் சாலைகள் வடிவமைக்கப்படுகின்றன.