கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு பெண்ணின் தொல்லையைப் பொறுக்க முடியாமல் பொங்கோல் புளோக் ஒன்றில் ஒரே தளத்தில் வசித்த ஆறு குடும்பங்கள் வீட்டை காலி செய்துள்ளன. அந்தப் பெண் தங்களுடைய வீட்டின் மீது எண்ணெய்யைத் தெளிப்பதாகவும் தரை அதிரும் அளவுக்கு சத்தமாக இசையை ஒலிக்க விடுவதாகவும் அக்கம்பக்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
காலணிகள் வைக்கும் இடத்தில் பன்றியின் காதை அவர் போட்டதாக மற்றொரு வீட்டுக்காரர் புகார் கூறி யிருந்தார். போலிசிடம் பலமுறை புகார் செய்யப்பட்டது. ஆனால் கைது செய்ய முடியாத குற்றச்செயல்கள் என்ப தால் அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்று நம்பப்படுகிறது. இதையடுத்து வேறு வழியின்றி இன்று வரை ஆறு குடும்பத்தினர் வீட்டை காலி செய்துள்ளனர். இதற்கிடையே புதிதாக அங்கு குடியேறிய குடும்பத்தினரும் இது குறித்து போலிசிடம் புகார் அளித்து உள்ளனர்.

