மக்களுக்குச் சிறந்த சுகாதாரப் பராமரிப்பை வழங்குவதற்கு ஒருவ ரால் முடியாது. மாறாக, ஒரு சமூக மாக அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட்டால் அது சாத்தியமாகும் என்றார் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்.
டான் டோக் செங் மருத்துவ மனையின் 175ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நேற்றுக் காலை நடைபெற்ற 12 கிலோ மீட்டர் நன்கொடை நடை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், நடை தொடங்குவதற்கு முன் பங் கேற்பாளர்களிடம் பேசினார்.
"இன்றைய நடை நிகழ்ச்சி தொடர்பில் $1 மில்லியனுக்கு மேற் பட்ட தொகை திரட்டப்பட்டுள்ளது. அது உங்கள் இலக்கையும் தாண்டி விட்டது என்பதை அறியும்போது மகிழ்ச்சியாக உள்ளது.
"இந்தப் பயனுள்ள நிகழ்ச்சியில் வெவ்வேறு சமூக குழுக்களில் இருந்து 1,750 பேர் பங்கேற்றுள்ள னர். இதில் முதியவர்கள் பலர் பங்கேற்று இருப்பது உற்சாகமளிக் கிறது.
"1995ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட டான் டோக் செங் சமூக நிதி மூலம் நோயாளியை மையமாகக் கொண்ட திட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
"இதன் மூலம் ஒவ்வோர் ஆண்டும் $2 மில்லியனுக்கு மேற்பட்ட தொகை 60 வயதுக்கு மேற்பட்ட 2,500 குடும்பங்களுக்கு உதவித் தொகையாக வழங்கப் பட்டு வருகிறது," என்றார் திரு ஹெங்.
"நமது மூத்த குடிமக்கள் தொடர்ந்து துடிப்பாகவும் ஆரோக் கியமாகவும் இருக்க உதவும் வழி வகைகளை ஆராய சுகாதார அமைச்சர் கான் கிம் யோங், நமது மருத்துவர்கள், சுகாதாரப் பராமரிப் பாளர்கள், மருத்துவமனை நிர் வாகிகள் ஆகியோருடன் சேர்ந்து பணியாற்றி வருகிறார். இந்த முயற்சி தொடர வேண்டும்.
"சுகாதாரப் பராமரிப்பில் மட்டும் கவனம் செலுத்துவதிலிருந்து இனி சுகாதாரத்திலும் முக்கியமாக கவனம் செலுத்தும் மனப் போக்குக்கு நாம் மாறி வருகிறோம். இதில் நாம் அனைவரும் நமது பங்கைச் செலுத்த வேண்டும்," என்று வேண்டுகோள் விடுத்தார் துணைப் பிரதமர் ஹெங்.

