பேங்காக்கில் ஆசியான் உச்சநிலை மாநாட்டையொட்டி ஆசியான் நாடு களைச் சேர்ந்த தலைவர்கள் ஒன்றுகூடியுள்ளனர்.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக்கொண்ட பிரதமர் லீ சியன் லூங், நான்கு தலைவர் களைச் சந்தித்து நடப்பு விவ காரங்கள் குறித்து பேசியுள்ளார்.
தாய்லாந்து, கம்போடியா, இந்தோனீசியா, வியட்னாம் ஆகிய நான்கு நாடுகளைச் சேர்ந்த தலை வர்களை பிரதமர் லீ சந்தித்தார்.
ஈராண்டுக்கு ஒரு முறை நடை பெறும் உச்சநிலை மாநாட்டுக்குப் பிறகு நேற்று செய்தியாளர்களிடம் பேசிய திரு லீ, இருதரப்பு சந்திப்பு நல்ல முறையில் இருந்ததாகத் தெரிவித்தார்.
வியட்னாம் பிரதமர் நுயன் சுவான் புக்கைச் சந்தித்தபோது அண்மையில் இருதரப்பு உறவில் ஏற்பட்ட சில உரசல்கள் குறித்து பேசியதாக பிரதமர் லீ சொன்னார்.
கடந்த மாதம் மரணமடைந்த தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் ஜெனரல் பிரேம் டின்சுலனந்தா வுக்கு இரங்கல் தெரிவிக்கும் ஃபேஸ்புக் பதிவில், 1978ஆம் ஆண்டில் கம்போடியாவுக்குள் வியட்னாம் நுழைந்தது பற்றியும் பிரதமர் லீ குறிப்பிட்டிருந்தார்.
இதில் வியட்னாம், கம்போடியா ஆகிய இரு நாடுகளும் அதிருப்தி அடைந்தன.
"இந்த விவகாரத்தில் சிங்கப் பூரின் நிலையை விளக்கினேன். இதில் அவர்களுடைய மனம் மாற வேண்டும் என்று நாம் எதிர் பார்க்க முடியாது, அதே போல நம் முடைய எண்ணம் மாற வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்க முடி யாது," என்று பிரதமர் லீ சொன்னார்.
ஆனால் பேச்சு வார்த்தையில் இந்தப் பிரச்சினைகளையும் தாண்டி இருவருக்கும் இடையே நட்பு வலுப்பட்டதாக பிரதமர் லீ தெரிவித்தார்.
கம்போடிய பிரதமர் ஹுன் சென்னை நேற்று பிற்பகல் பிரதமர் லீ சந்தித்தார். இந்தப் பேச்சு வார்த்தையும் அதேபோன்ற கருப் பொருளில் அமைந்தது.
"எங்களுக்கு இடையே பரஸ்பர புரிந்துணர்வு ஏற்பட்டதாக நம்பு கிறேன். நாங்கள் இருவரும் எத்த கைய நிலைப்பாட்டில் இருக்கிறோம் என்பதையும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவும் இந்தப் பேச்சு உதவியாக இருந்தது," என்று பிரதமர் லீ கூறினார்.
சனிக்கிழமை அன்று இந்தோ னீசிய அதிபரையும் பிரதமர் லீ சந்தித்தார். அப்போது இந்தோ னீசிய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோக்கோ விடோடோவுக்கு அவர் வாழ்த்துகளைத் தெரி வித்துக்கொண்டார்.
ஞாயிற்றுக்கிழமை தாய்லாந்து பிரதமரையும் திரு லீ சந்தித்ததாக பின்னர் வெளியிட்ட தகவல் ஒன்றில் பிரதமர் அலுவலகம் தெரி வித்தது.

