டெங்கி: 370,000 சோதனை, 900 குடும்பங்களுக்கு அபராதம்

டெங்கி: 370,000 சோதனை, 900 குடும்பங்களுக்கு அபராதம்

2 mins read
80dce19c-db47-40a4-87dc-c18a9e6361ea
வீடுகளில் உள்ள இதுபோன்ற கிண்ணங்களில் கொசு இனப் பெருக்கம் காணப்பட்டதாக தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது. படங்கள்: என்இஏ -

சிங்கப்பூரில் டெங்கிப் பாதிப்பு சம்பவங்கள் மீண்டும் அதிக அளவுக்கு தலைதூக்கியிருப்பதால் அவற்றுக்கு காரணமான கொசு இனப்பெருக்கம் காணப்படும் வீடு களை அதிகாரிகள் அடையாளம் கண்டுபிடித்து அபராதம் விதித் துள்ளனர்.

இவ்வாண்டின் முதல் ஐந்து மாதங்களில் கொசு இனப் பெருக்கம் உள்ள இடங்களைக் கண்டுபிடிப்பதற்காக தீவு முழு வதும் 372,000 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.

இவற்றில் 6,500 இடங்களில் கொசு இனப்பெருக்கம் காணப் பட்டது என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் வாரியம் குறிப் பிட்டது.

மேலும் கொசு இனப்பெருக்கம் கண்டுபிடிக்கப்பட்ட 900 வீடு களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட தாகவும் அது கூறியது.

சிங்கப்பூரிலேயே டெங்கி சம்ப வங்கள் அதிகம் ஏற்பட்ட இரண்டு வட்டாரங்கள் உட்லண்ட்சில் உள்ளன.

இதில் உட்லண்ட்ஸ் அவென்யூ 6, உட்லண்ட்ஸ் சர்க்கிள், உட் லண்ட்ஸ் கிரெசண்ட், உட்லண்ட்ஸ் ரிங் ரோடு ஆகிய வட்டாரங்களும் அடங்கும். இந்த இடங்களில் மட்டும் 360 டெங்கி சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.

இதற்கு அடுத்ததாக டெங்கிச் சம்பவங்களால் அதிகம் பாதிக்கப் பட்ட மற்ற மூன்று இடங்கள் கேலாங்கில் உள்ளன.

கிலிமார்ட் ரோடு மற்றும் சிம்ஸ் அவென்யூ (115 சம்பவங்கள்), சாய் சீ (112 சம்பவங்கள்), ஜாலான் லெம்பா தாம்சன், சூ சோவ் ரைஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய தாம் சன் வட்டாரம், லேக்வியூ அருகே யுள்ள அப்பர் தாம்சன் ரோடு ஆகிய மூன்று வட்டாரங்களில் டெங்கி சம்பவங்கள் அதிகம் ஏற் பட்டன.

இந்தப் பகுதிகளில் 74 விழுக் காடு கொசு இனப்பெருக்கம் வீடுகளில் நிகழ்ந்துள்ளன.

சிங்கப்பூர் முழுவதும் டெங்கி சம்பவங்கள் அதிகரித்துள்ள வேளையில் வாரியம் இந்தப் புள்ளி விவரங்களை நேற்று வெளியிட்டது.