ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பிரதமர் லீ: ஒன்றிணைந்து செயல்பட்டால் ஆசியானின் குரல் ஒலிக்கும்

ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பிரதமர் லீ: ஒன்றிணைந்து செயல்பட்டால் ஆசியானின் குரல் ஒலிக்கும்

2 mins read
be306611-a262-443a-9d20-93f8f0677102
பேங்காக்கில் நடந்த ஆசியான் உச்சநிலை மாநாட்டில் (இடமிருந்து) மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது, மியன்மார் தலைவர் ஆங் சான் சூச்சி, பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ சா, வியட்னாம் பிரதமர் நுயன் சுவான் புக், புருணை சுல்தான் ஹசனல் போல்கியா, கம்போடியப் பிரதமர் ஹுன் சென், இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ, லாவோஸ் பிரதமர் தொங்லோன் சிசோலித். படம்: சாவ் பாவ் -

ஆசியான் நாடுகள் போன்ற சிறிய நாடுகளால் வல்லரசுகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியாது என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

ஆனாலும், வர்த்தகம், பாது காப்பு, தொழில்நுட்பம் போன்ற வற்றில் ஒட்டுமொத்த நலன் கருதி இணைந்து செயல்பட்டால் ஆசியான் நாடுகள் முன்னேற லாம் என்று திரு லீ கூறினார்.

தாய்லாந்து தலைநகர் பேங் காக்கில் நடைபெற்ற 34வது ஆசியான் உச்சநிலை மாநாட்டின் கடைசி நாளான நேற்று சக உறுப்பு நாடுகளிடம் பிரதமர் இவ்வாறு சொன்னார்.

"நமது நலன்கள் ஒன்றிணை யும் பொதுவான தளத்தை நாம் கண்டறிந்து, ஒரே குரலாக ஒலிக்கவேண்டும்," என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இந்தோ-பசிபிக் வட்டார ஒத்து ழைப்பு தொடர்பான ஒரு கட்டமைப் பிற்கு ஆசியான் நாடுகள் ஒப்புதல் அளித்தது தமக்கு மகிழ்ச்சியைத் தருவதாக அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப் பூசல் நீடித்து வரும் நிலையில் வட்டார அளவில் ஒற்று மையாக செயல்பட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.

"இந்த விவகாரத்தைச் சரிவர கையாளாவிடில் அது அவ்விரு நாடுகளுக்கு இடையிலான உறவு களைப் பாதித்து, கடுமையான விளைவுகளை ஏற்படுத்திவிடும்," என்றும் அவர் எச்சரித்தார்.

"வல்லரசு நாடுகளுக்கிடையே ஆரோக்கியமான ஒத்துழைப்பு காரணமாக நாமும் பலன் பெற்றுள் ளோம். அது, இந்த வட்டாரத்தில் வளர்ச்சியையும் நிலைத்தன்மை யையும் கொண்டுவரும். ஆதலால் சீனாவும் அமெரிக்காவும் தங்க ளுக்கிடையிலான பூசல்களைக் களையப் பாடுபடும் என நம்பு வோம்," என்றார் திரு லீ.

தென்சீனக் கடல் பகுதியில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நடத்தை விதிகள் குறித்த விவா தங்களில் நல்ல முன்னேற்றம் எட்டியிருப்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். அப்பகுதி யில் அமைதியையும் நிலைத்தன் மையையும் கட்டிக்காத்து, மேம்ப டுத்துவதோடு தடையற்ற கடல் பயணத்தையும் அக்கடல்பரப்பிற்கு மேல் வான்வழிப் பயணத்தையும் உறுதிசெய்ய அந்த நடத்தை விதிகள் இலக்கு கொண்டுள்ளன.

மியன்மாரின் ராக்கைன் மாநி லத்தில் நிலவும் சூழலை ஆசியான் ஆக்கபூர்வமாக அணுகவேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

பொருளியலைப் பொறுத்த மட்டில், வரிகள் நீக்கம், முதலீடு கள் தாராளமயமாக்கம், ஒழுங்கு முறைகள் சீராக்கம், தொடர்பு மேம்பாடு போன்றவற்றில் குறிப்பி டத்தக்க முன்னேற்றம் கண்டுள்ள தாகவும் அவர் சொன்னார்.