$11 மில்லியன்: விற்பனைக்கு விடப்பட்டுள்ள மூன்று கடைவீடுகள்

லிட்டில் இந்தியாவில் அடுத்தடுத்துள்ள மூன்று கடைவீடுகள் $11 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ளன. இந்தக் கடைவீடுகள் மொத்தம் 3,870 சதுர அடி நிலப் பரப்பளவில் அமைந்துள்ளன. அவற்றின் தரை பரப்பளவு சுமார் 7,771 சதுர அடியாகும்.

இந்தக் கடைவீடுகளைச் சந்தைப்படுத்தும் முகவை நிறுவனமான 'குஷ்மேன் & வேக்ஃபீல்ட்' இந்த விவரங்களைத் தெரிவித்தது.

இந்தக் கடைவீடுகள் டல்ஹௌசி லேன், மெட்ராஸ் ஸ்திரீட் சந்திப்பில் அமைந்துள்ளன. இவை அமைந்துள்ள நிலப்பகுதியின் குத்தகைக் காலம் 99 ஆண்டுகள். குத்தகை காலம் 1993ஆம் ஆண்டு நவம்பரில் தொடங்கிய நிலையில், இன்னும் சுமார் 73 ஆண்டுகள் குத்தகையில் எஞ்சியுள்ளன.

எண் 27 டல்ஹௌசி லேனில் அமைந்துள்ள கடைவீடு இரு மாடிகளைக் கொண்டுள்ளது. எண் 29, 31ல் உள்ள மற்ற இரு கடைவீடுகளில் இரு மாடிகளுக்கு இடையே இடைமாடி உள்ளது.

கடைவீடுகளின் விலை $11 மில்லியன் என்றால், தரை பரப்பளவு அடிப்படையில் ஒரு சதுர அடிக்கு $1,415ஆக மதிப்பிடப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!