டெங்கி அதிகம் பரவும் இடங்களில் விழிப்புடன் இருக்கும் வட்டாரவாசிகள்

டெங்கி அதிகம் பரவும் இடங்களில் விழிப்புடன் இருக்கும் வட்டாரவாசிகள்

1 mins read
12474d4b-7485-43b2-b662-b103b79557bb
-

கொசுக்களால் பரவும் டெங்கி நோயால் இவ்வாண்டில் மட்டும் 5,500க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 2,000 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஐவர் உயிரிழந்தனர்.

டெங்கி அதிகம் பரவும் இடங்களில் ஆகப் பெரிதான இரண்டு இடங்கள் உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் உள்ளன. அவற்றை அடுத்து மூன்றாவது ஆகப் பெரிய இடம் கேலாங்கிலும் நான்காவது சை சீ வட்டாரத்திலும் உள்ளன. பாதிக்கப்பட்ட இடங்களில் வசிப்போரில் பலர் தங்கள் சுற்றுவட்டாரத்தில் டெங்கி வேகமாகப் பரவுவது பற்றி அறிந்திருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் குறிப்பிட்டது.

65 வயதுக்கும் மேற்பட்டோர் இந்நோய்க்கு இலக்காவது குறித்து நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மற்றவர்களிடத்தில் தென்படும் டெங்கிக்கான அறிகுறிகள் அவர்களிடத்தில் தென்படுவதில்லை என்று கூறப்படுகிறது. அடுக்குமாடிக் கட்டடங்களின் பொது நடைவழிகளின் ஓரங்கள், வீசி எறியப்படும் பிளாஸ்டிக் பெட்டிகள், போத்தல்கள், தகரக் குவளைகள் ஆகியவற்றில் தேங்கும் நீரில் டெங்கி நோயைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்கின்றன.