சாங்கி விமான நிலையத்தில் அனு மதியில்லாத ஆளில்லா வானூர்தி களால் நேற்று முன்தினம் இரவு விமானப் பயணங்கள் தாமதமாகி யும் தடைபட்டும் போயின. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், கருடா, ஏர் ஏஷியா போன்ற நிறுவனங்களின் கிட்டத்தட்ட 25 விமானப் பயணங் கள் இதனால் பாதிப்படைந்தன. இது குறித்து சிங்கப்பூர் சிவில் விமானத்துறை ஆணையம் விசாரணை மேற்கொண்டு வரு கிறது. ஒன்றுக்கு மேலான ஆளில்லா வானூர்திகள் தென் பட்டதாகவும் அவை யாவும் பொழுதுபோக்குக்காக தயாரிக்கப் பட்டவை அல்ல என்று 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழுக் குத் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு ஆளில்லா வானூர்தி களால் விமான நிலையச் சேவை கள் பாதிப்படைவது இதற்குமுன் அமெரிக்கா, பிரிட்டன், சீனா போன்ற நாடுகளிலும் நடந்துள்ளது.
சென்ற டிசம்பர் மாதம் இது போன்ற ஒரு சம்பவத்தால் லண்டனின் 'கேட்விக்' விமான நிலையம் கிட்டத்தட்ட 1,000 விமானப் பயணங்களை ரத்து செய்தும் தாமதப்படுத்தியும் இருந் தது. இதனால் 140,000 பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
ஆளில்லா வானூர்திகளால் விமானங்களுக்கு எத்தகைய அபாயம் ஏற்படக்கூடும் என்பதன் தொடர்பில் அவற்றின் உரிமை யாளர்கள் சில கூறுகளை நினை வில் கொள்ளவேண்டும்.
மேலே பறக்கவிருக்கும் விமானத்தையோ தரையிறங்க இருக்கும் விமானத்தையோ மோதும் ஆளில்லா வானூர்தி, அதன் உலோகம், பிளாஸ்டிக், மின்கலம் ஆகியவற்றால் பாதிப் புறச் செய்யலாம். பறவைகளின் எடைக்குச் சமமாக இருந்தாலும் மோதும்போது ஏற்படும் தாக்கம் விபரீதமாக அமையும்.
ஆளில்லா வானூர்திகளுக் கென ஒரு போக்குவரத்து நிர்வாக முறை நாடளவில் அறிமுகப்படுத் தப்படுவது குறித்து நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆராய்ந்து வரு கின்றனர். பொழுதுபோக்குக்காக ஆளில்லா வானூர்திகளை அனு மதி இல்லாமலும் பறக்கவிடலாம். ஆனால் அவற்றின் உரிமையாளர் கள் சில விதிமுறைகளைப் பின் பற்றுவது அவசியம்.
ஆளில்லா வானூர்தியின் மொத்த எடை ஏழு கிலோ அல்லது அதற்கும் குறைவாக இருக்கவேண் டும். அதிலிருந்து தண்ணீர் அல் லது வேறு ரசாயனங்கள் கசியக் கூடாது. கடல் மட்டத்திலிருந்து 200 அடி உயரத்துக்குள்தான் அவை பறக்கலாம்.
மரினா சவுத், ஓல்ட் ஹாலந்து ரோடு போன்ற இடங்களில் உள்ள திடல்களில், அதிலும் மரங்கள் இல்லாத பெரிய திறந்த வெளி களில் ஆளில்லா வானூர்திகளைப் பறக்க விடுவது சிறப்பு.
ஆனால் பூமலைத் தோட்டம், ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா போன்ற தேசிய பூங்காக் கழகத்தின் மேற்பார்வையில் இயங்கும் இடங் களில் அவற்றைப் பறக்க விடுவது சட்டவிரோதம். சாங்கி விமான நிலையம், பயலேபார் விமானத்தளம் ஆகியவற்றால் தீவின் கிழக்குப் பகுதி பெரும்பாலும் பறக்கவிட முடியாத பகுதியாகிறது. சட்ட விரோதமாக வானூர்திகளைப் பறக்கவிடும் குற்றவாளிகளுக்கு 12 மாதங்கள் வரையிலான சிறைத் தண்டனை, $20,000 வரையிலான அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

