இணையம் மூலம் வேலைக்கு ஆள் சேர்க்கும் விகிதம் 16 விழுக் காடு வளர்ச்சி அடைந்துள்ளதாக அண்மைய ஆய்வு ஒன்று தெரி வித்துள்ளது. சென்ற ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டின் மே மாதத்தில் இந்த வளர்ச்சி ஏற்பட்டதாக இணைய ஆட்சேர்ப்பு சேவை நிறுவனமான 'மான்ஸ்டர்.காம்' தகவல் வெளியிட்டது.
சென்ற மாதத்தின் வளர்ச்சி பெரும்பாலும் தகவல் தொழில்நுட் பம், தொலைத்தொடர்பு, வெளி நிறுவனத்தின் சேவையை நாடும் வர்த்தகச் செயல்முறை போன்றவற் றால் ஏற்பட்டது. இவற்றின் தொடர் பிலான இணைய ஆட்சேர்ப்பு விகி தம், ஏப்ரல் மாதத்தில் சற்று சரிவு கண்டபின் மே மாதத்தில் 42 விழுக்காடு உயர்ந்தது.
அடுத்த நிலையில் வங்கி, நிதி, காப்புறுதித் துறைகள் 27 விழுக் காடு வளர்ச்சி கண்டன. இத்துறை கள் தொடர்பான இணைய ஆட் சேர்ப்பு விகிதம் வட்டார நாடு களான மலேசியாவையும் பிலிப்பீன் சையும் விஞ்சிவிட்டதாக வேறோர் அறிக்கையில் நிறுவனம் தெரிவித் தது. அவ்வறிக்கையின்படி இக் குறிப்பிட்ட துறைகளில் சென்ற ஆண்டு மே மாதத்துடன் ஒப் பிடுகையில் இவ்வாண்டு மே மாதத்தில் மலேசியா 14 விழுக் காடும் பிலிப்பீன்ஸ் 17 விழுக்காடும் வளர்ச்சி பெற்றிருந்தன.
சுகாதாரப் பராமரிப்பு நிபுணர் களுக்கான தேவை சென்றாண்டு ஜூன் மாத விகிதத்திலிருந்து கடந்த மாதங்களில் சற்று மீண்டு வந்து சென்ற மாதம் எட்டு விழுக் காடு வளர்ச்சி கண்டது.
வீடு, மனை தொழில்துறை தொடர்பான இணைய ஆட்சேர்ப்பு விகிதம் மட்டும் சென்ற ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் சென்ற மாதத்தில் ஐந்து விழுக் காட்டுக்குச் சரிந்தது.
இணையத்தில் விளம்பரம் செய்யப்படும் வேலைகள் குறித்து அனைத்து நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஒவ்வொரு மாத மும் நிறுவனம் தகவல் சேகரித்து வருகிறது.
உள்ளூர் ஆட்சேர்ப்பு நடவடிக் கைகளில் குறைந்தபட்சத்திலும் அதிக அளவிலும் எந்தெந்தத் தொழில்துறைகளில் வளர்ச்சி உள்ளது எனும் தகவல்களை நிறு வனம் பதிவு செய்து வருகிறது. ஏதேனும் ஒரு விளம்பரதாரர் அல் லது மூலதாரரை மட்டும் கொண்டு இந்த வளர்ச்சிப்போக்கு கணக் கிடப்பட மாட்டாது.

