டாக்சி ஓட்டுநர்களுக்கான புதிய மின்னிலக்கப் பயிற்சித் திட்டம்

தேசிய டாக்சி சங்கத்துடன் ‘கம்ஃபர்ட்டெல்குரோ’ டாக்சி நிறு வனம் இணைந்து புதிய மின்னிலக்கப் பயிற்சித் திட்டம் ஒன்றை ஓட்டுநர்களுக்காகத் தொடங்கி உள்ளது. வேகமாக மாறிவரும் மின்னிலக்க உலகில் சமாளிப்பதற் காக டாக்சி ஓட்டுநர்களுக்கு இத்திட்டம் கைகொடுக்கும் என்று நேற்று ஒப்பந்தத்தை உறுதிசெய்த இருதரப்பும் தெரிவித்தன.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘டாக்சி ஓட்டுநர்களுக்கான பயிற் சிக் குழு’, பொருத்தமான மின்னிலக்கப் பயிற்சியைத் திட்டமிட்டு வழங்கும். சாலை ஓரத்தில் டாக்சிக்காக காத்திருப்பதும் ரொக்க மாகக் கட்டணம் செலுத்துவதும் பயணிகளுக்கிடையே குறைந்து வரும் போக்குகளாக உள்ளன.

இதற்கிடையே டாக்சிப் பயணங்களுக்கான முன்பதிவை உறுதி செய்வது, பயணிகளின் இருப்பிடத்தைக் கண்டுபிடிப்பது, கட்டணத் தைப் பெற்றுக்கொள்வது, டாக்சியை நிறுத்தக் கட்டணம் செலுத் துவது, டாக்சி நிறுவனங்களுடன் பரிவர்த்தனை செய்து திறமையான முறையில் சாலைகளில் பயணம் செய்வது போன்றவற்றின் தொடர் பில் ஓட்டுநர்கள் தங்களுக்குப் பயன்தரக்கூடிய செயலிகளையும் மற்ற பல தொழில்நுட்பங்களையும் இயக்க அறிந்திடுவர்.

மின்னிலக்கப் பணியிடத்துக்கான ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற் சிக்கு, ‘கம்ஃபர்ட்டெல்குரோ’ நிறு வனம் அதன் 27,000 ஓட்டுநர் களில் 10,000 பேரை அனுப்பும்.

இப்பயிற்சித் திட்டம் என்டியுசி யின் வேலை நியமன, வேலைத் தகுதி கழகம் (இடுஐ) மற்றும் ‘என்டியுசி லெர்லிங்ஹப்’ ஆகிய வற்றின் ஆதரவில் நடத்தப்படும்.

எதிர்காலப் பொருளியலுக்கு ஏற்ற மனப்போக்கையும் அடிப் படைத் திறன்களையும் சிங்கப்பூரர் கள் பெறுவதற்காக ‘ஸ்கில்ஸ் ஃபியூச்சர் சிங்கப்பூர்’ அமைப்பி னால் மேற்கொள்ளப்படும் தேசிய அளவிலான முயற்சியின் ஒரு பகுதி இது.

இதற்கான முன்னோட்டப் பயிற் சித் திட்டத்தில் கலந்துகொண்ட கிட்டத்தட்ட 150 டாக்சி ஓட்டுநர் களின் கருத்துத் தெரிவிப்பைக் கொண்டு புதிய பயிற்சித் திட்டம் அமைந்திருக்கும்.

இந்த ஒரு நாள் பயிற்சியை அடுத்தாண்டு இறுதிக்குள் கிட்டத் தட்ட 10,000 ஓட்டுநர்கள் முடித் திருப்பர் என்று எதிர்பார்க்கப்படு கிறது.

அத்துடன் ஒரு நாள் பயிற்சிக் காகச் செல்லும் ஓட்டுநர்களின் அன்றைய ஊதியத்தை ‘இடுஐ’யும் ‘கம்ஃபர்ட்டெல்குரோ’ வும் ஈடுகட்ட ஒரு குறிப்பிட்ட சலுகைத் தொகையைத் தரும்.

“டாக்சி துறையில் கைபேசிச் செயலிகள் மிக இன்றியமையாத வையாக ஆகிவிட்டன. அதனால் அவற்றைப் பயன்படுத்த டாக்சி ஓட்டுநர்கள் கற்றுக்கொள்வதும் முக்கியமாகிறது,” என்றார் ‘கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சி’யின் தலைமை நிர்வாகி திரு அங் வெய் நெங்.

“டாக்சி ஓட்டுநர்களில் 60 வயதுக்கு மேற்பட்டோர் கிட்டத் தட்ட பாதி எண்ணிக்கையில் உள் ளனர். தேவையான, நடைமுறைக் கான மின்னிலக்க அறிவைப் பெற் றுக்கொள்வதன் முக்கியத் துவத்தை இவர்கள் அடையாளம் காண்பது அவசியம்,” என்றார் என்டியுசியின் உதவி இயக்குநர் திரு அங் ஹின் கீ.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!