புதியதை நாடும் அண்மைய வாடிக்கையாளர் போக்கு

புதியதை நாடும் அண்மைய வாடிக்கையாளர் போக்கு

2 mins read

வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பழக்கப்பட்ட பொருட்களிலிருந்து புதிய பொருளுக்கு மாறிக்கொள் ளும் போக்கு ஐந்து ஆண்டு களுக்கு முன் இருந்த நிலையை ஒப்பிடுகையில் இப்போது அதி கரித்தாக அண்மைய ஆய்வு தெரிவித்துள்ளது.

ஆய்வில் பங்கேற்றோரில் கிட் டத்தட்ட பாதி பேர் புதிய பொருட் களைப் பயன்படுத்திப் பார்க்க விரும்புவதாக நேற்று வெளியிடப் பட்ட 'நீல்சன்' அறிக்கை ஒன்று கூறியுள்ளது.

இணையத்திலும் கடைகளி லும் மிகச் சுலபமாக, பலதரப் பட்ட பொருட்களும் சேவைகளும் இப்போது அதிகமாகக் கிடைப் பதே இதற்குக் காரணம் என்று உலகளாவிய தரவுப் பகுப்பாய்வு நிறுவனமான 'நீல்சன்' கூறியது.

ஆய்வில் பங்கேற்ற ஐந்தில் மூவர் அல்லது 61 விழுக்காட்டினர், தங்களுக்கு விருப்பமான பொருட் களையே தொடர்ந்து பயன்படுத்த விரும்பினாலும் வேறு பொருட் களைப் பயன்படுத்திப் பார்க்க முன்வருவர் என்று தெரிவித்திருந் தனர்.

அத்துடன் புதியனவற்றைப் பயன்படுத்திப் பார்க்க மிகவும் விருப்பம் என்று 28 விழுக் காட்டினர் கூறியிருந்தனர்.

புதிய பொருளுக்கு மாற விரும்புவோரில் 78 விழுக் காட்டினர், தரத்திற்கு ஏற்ற கட் டணத்தைக் காரணமாகச் சுட் டினர்.

இதைத் தொடர்ந்து சலுகை விலையில் கிடைப்பதென்றால் புதிய பொருட்களைப் பயன்படுத்த முன்வருவதாக ஆய்வில் பங்கேற் றோரில் 73 விழுக்காட்டினர் தெரி வித்தனர்.

அத்துடன் சிங்கப்பூரர்கள் தங் கள் குடும்பத்தினர், நண்பர்களின் பரிந்துரைகளையும் அதிகம் நம் பிப் பொருட்களை வாங்குவதாக ஆய்வு கூறியது.

ஆய்வில் பங்கேற்றோரில் 52 விழுக்காட்டினர் புதிய சாக்லெட், பிஸ்கட் வகைகளுக்கு மாற விரும்புவதாகத் தெரிவித்திருந் தனர்.