புதிய ஃபூனான் மால் கடைகளுக்கான இடங்கள் 95 விழுக்காடு நிரப்பப்பட்டன

புதிய ஃபூனான் மால் கடைகளுக்கான இடங்கள் 95 விழுக்காடு நிரப்பப்பட்டன

1 mins read
93c5f6cb-2027-4bf2-97f1-75bbac5157b8
PHOTO: CAPITALAND SINGAPORE -

வரும் 28ஆம் தேதியன்று திறக்கவுள்ள புதிய ஃபூனான் மாலில் கடைகளுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் 95 விழுக்காடு நிரப்பப்பட்டுவிட்டது. கடைத்தொகுதியில் உள்ள 190க்கும் மேற்பட்ட கடைகளில் 60 விழுக்காட்டுக்கு மேலானவை உள்ளூர்ப் தயாரிப்புகள் என்று 'கேப்பிட்டலேன்ட்' நேற்று தெரிவித்தது.

அத்துடன் 80க்கும் மேற்பட்ட உணவுக் கடைகள் கடைத்தொகுதியில் கிட்டத்தட்ட 25 விழுக்காடு இடத்தைப் பிடித்திருக்கும் என்றும் கூறப்பட்டது. சிங்கப்பூரைப் பற்றிய தகவல்களைப் பெறவோ சுற்றுத்தலங்களுக்கான நுழைவுச்சீட்டுகளை வாங்கவோ சுற்றுப்பயணிகளுக்கு உதவ சிங்கப்பூர் சுற்றுப்பயண வாரியத்துடன் இணைந்து ஃபூனான் அதன் இரண்டாம் அடித்தள மாடியில் உள்ள வருகையாளர் நிலையத்தை நிர்வகிக்கும்.