ஆசிய நிறுவன வாடிக்கையாளர்களுக்கு சிங்கப்பூர் வங்கிகள் திருப்தி

ஆசிய நிறுவன வாடிக்கையாளர்களுக்கு சிங்கப்பூர் வங்கிகள் திருப்தி

1 mins read

சிங்கப்பூரின் வங்கிகள் ஆசியாவின் பெருநிறுவன மற்றும் நிறுவன வாடிக்கையாளர்களுக்குச் சேவை வழங்குவது அதிக அளவு திருப்தி அளித்துள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. குறிப்பாக 'டிபிஎஸ்' வங்கி, 'யுஓபி' வங்கி, 'ஓசிபிசி' வங்கி ஆகியவை வழங்கும் வங்கிச் சேவைகள் அதிக திருப்தி அளித்திருப்பதாக 'ஈஸ்ட் என்ட் பார்ட்னஸ் ஏ‌ஷியா' நிறுவனம் ஈராண்டுக்கு ஒருமுறை நடத்தி வரும் ஆய்வு கண்டறிந்துள்ளது.

அத்துடன் குறைந்த கட்டணத்தில் தரமான சேவைக் காகவும் கடன் ஒப்புதல் முறைக்காகவும் சிங்கப்பூரின் வங்கிகள் அதிக அளவு புள்ளிகள் பெற்றிருந்தன. சீனா, ஹாங்காங், இந்தியா, இந்தோனீசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர், தென்கொரியா, தைவான், தாய்லாந்து ஆகிய ஆசியாவின் பத்து பெரும் சந்தைகளில் சிறப்பாகச் செய்து வரும் 1,000 நிறுவனங்களின் பரிவர்த்தனை நடவடிக்கைகளை ஒட்டி நிறுவனம் இந்த ஆய்வை மேற்கொண்டது.