சிரியா சென்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் இணைய விரும்பிய 40 வயது சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டார்.
அத்துடன், 62 வயது பெண் ஒருவருக்கும் 39 வயது ஆடவர் ஒருவருக்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
பயங்கரவாத நடவடிக்கை
களில் சம்பந்தப்பட்ட வெளிநாட்டினருடனும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் பலருடனும் ரஷிடா மஸ்லான் எனும் அந்த மாது தொடர்பில் இருந்தார்.
தயாரிப்பு உதவியாளராக இருந்த ரஷிடாவுக்கு இவ்வாண்டு மார்ச் மாதத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் மூலம் அவர் ஆலோசனைகளுக்குச் செல்ல வேண்டும், வேலையையோ, வீட்டு முகவரியையோ மாற்ற வேண்டுமென்றாலோ வெளிநாடு
களுக்குச் செல்ல வேண்டும் என் றாலோ அரசாங்கத்தின் ஒப்புத லைப் பெற வேண்டும்.
வெளிநாட்டில் நிகழும் சண்டை களில் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் மீது அனுதாபம் காட்டும் வகையிலேயே ரஷிடா வெளிநாட்டு நபர்களுடன் தொடர்பு வைத்தி ருந்தார் என்று புலனாய்வில் தெரிய வந்தது.
தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட மற்றொருவர் 39 வயது முகம்மது ஃபைருஸ் ஜுனாய்டி. விநியோக ஊழியரான அவர், ஐஎஸ் சித்தாந்தங்களால் கவரப்பட்டு, அந்த அமைப்பில் சேர சிரியாவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்ததாக
வும் புலனாய்வில் தெரிய வந்தது என உள்துறை அமைச்சு கூறியது.
"ஐஎஸ் அமைப்பில் சேர்ந்து போராடி மாண்டுபோவதை வீரச்செயல் என்று அவர் எண்ணி
இருந்தார். பிரதான ஊடகங்கள் அந்த அமைப்பைப் பற்றி கூறும் தகவல்களை அவர் பொய்யென நிராகரித்தார்," என்றும் அமைச்சு சொன்னது. ஃபைருஸ் ஆலோசனை வகுப்புகளுக்கும் மறுவாழ்வு பயிற்சிக்கும் செல்லவேண்டும்.
உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்
டுள்ள மற்றொரு நபரான 40 வயது இம்ரான் மஹ்மூத், ஐஎஸ் அமைப்பின் போதனைகளால் சுயதீவிரவாதப் போக்கை நாடினார் என்று விசாரணைகளில் தெரிய வந்ததாகக் கூறிய அமைச்சு, அவர் இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் தடுத்து வைக்கப்பட்டார் என்றும் குறிப்பிட்டது.
தடுப்புக் காவலில் இருந்து நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்ட சிங்கப்பூரர்கள் நால்வர் பற்றிய தகவலையும் அமைச்சு நேற்று வெளியிட்டது.
தடுப்புக் காவலில் இருந்த அந்த நால்வரும் தங்கள் மறுவாழ்வுப் பயிற்சியில் நல்ல முன்னேற்றத்தைக் காட்டினர் என்றும் அவர்களால் பாதுகாப்புக்கு மிரட்டல் ஏற்படாது என்றும் அமைச்சு கூறியது. 50 வயது அப்துல் ரஹ்மான், 30 வயது அசிரானி ஹுசைனி, 24 வயது சைக்கா இஸா ஸஹ்ரா அல் அன்சாரி, 26 வயது முகம்மது கைருல் முகம்மது ஆகியோரே அந்த நால்வர்.
உள்துறை அமைச்சின் இந்த நடவடிக்கை பற்றி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்துரைத்த முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, "தீவிரவாத சித்தாந்தங்களுக்கு அடிமையாவோர் பற்றி நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். அப்படி யாராவது இருந்தால் உடனடியாக முயிஸ் அமைப்பிடம் தெரிவிக்கலாம். இது நம்மிடையே தொடரும் சவாலாக இருந்து வருகிறது," என்று குறிப்பிட்டார்.

