புதிய வகை மிரட்டல் மின்னஞ்சல் பற்றி போலிஸ் எச்சரிக்கை

புதிய வகை மிரட்டல் மின்னஞ்சல் பற்றி போலிஸ் எச்சரிக்கை

1 mins read

உடனடியாக, ஒரு வங்கிக் கணக்குக்கு உங்கள் பணத்தை மாற்றிவிடுங்கள். அவ்வாறு செய்யவில்லை என்றால் உங்கள் வீட்டுக்குத் தீ வைக்கப்படும் என்று மிரட்டும் மின்னஞ்சல்கள் கிடைத்திருப்பதாக பலர் தங்களிடம் புகார் கொடுத்துள்ளதாக போலிஸ் தெரிவித்திருக்கிறது.

இந்தப் புதிய வகை மிரட்டல் குறித்து தங்களுக்கு 69 புகார் கிடைத்துள்ளதாகக் கூறிய போலிஸ், இந்த மோசடியில் இதுவரை எந்தப் பண இழப்பும் ஏற்படவில்லை என்றும் கூறியது. இப்படியொரு மின்னஞ்சல் கிடைத்தால் அமைதியாக இருக்கும்படியும் பணத்தை மாற்றிவிட எவ்வித நடவடிக்கையிலும் இறங்க வேண்டாம் என்றும் போலிஸ் பொதுமக்களுக்கு ஆலோசனை கூறுகிறது.