குடியிருப்புப் பகுதிகளை சட்டவிரோதமாக குறுகிய காலத் துக்கு வாடகைக்கு விட்ட முன்னாள் சொத்து முகவர் ஒருவர் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
ஜோயல் சு ஜிசிங் எனும் 38 வயது ஆடவர் மூன்று மாதங்களுக்குக் குறைவான காலத்துக்கு வாடகைக்கு விட்ட ஆறு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். அவர் மீது மே மாதம் 19ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டது.
வாடகைக்கு விட்ட இரு வீடுகள் கேலாங்கில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளன. மற்ற மூன்று வீடுகள், வெவ்வேறு தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்தன. மற்றொரு குடியிருப்பான தரை வீட்டில் அவர் சட்டவிரோதமாக வாடகைக்கு விட்டார். இந்த வீடுகள் அனைத்தும் சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் உள்ளன.
நேற்று நீதிமன்றத்தின் தோன்றிய ஜோயலிடமிருந்து எவ்வித மனுவும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவரது வழக்கு ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டது.

