ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு, மெடிசேவ் நிரப்புத்தொகை மூலம் சுமார் 1.7 மில்லியன் சிங்கப்பூரர்கள் பயனடைவர்

ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு, மெடிசேவ் நிரப்புத்தொகை மூலம் சுமார் 1.7 மில்லியன் சிங்கப்பூரர்கள் பயனடைவர்

1 mins read
85868e5e-4cf2-49e6-8e9e-92bbcc055ab7
-

பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி) பற்றுச்சீட்டு, மெடிசேவ் நிரப்புத்தொகை ஆகியவற்றால் சுமார் 1.7 மில்லியன் சிங்கப்பூரர்கள் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது. தகுதிபெறும் சிங்கப்பூரர்களுக்குக் குறுந்தகவல்கள், கடிதங்கள் ஆகியவை அனுப்பப்படும் என்று நிதியமைச்சு புதன்கிழமை (26 ஜூன்) தனது அறிக்கையில் தெரிவித்தது. ஜூலை மாதத்திற்கும் நவம்பர் மாதத்திற்கும் இடையே அவர்கள் அந்தச் சலுகைகளைப் பெறுவர்.

முன்னோடித் தலைமுறையினரும் மெர்டேக்கா தலைமுறையினரும் ஜூலையில் தங்கள் அனுகூலங்களைப் பெறுவர். ஆகஸ்ட் மாதத்தில் கிட்டத்தட்ட 1.4 மில்லியன் சிங்கப்பூரர்களுக்கு ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுகள் கிடைக்கும்.

ஆகஸ்ட் மாதத்தில், 65 வயதுக்கு மேற்பட்ட கிட்டத்தட்ட 520,000 சிங்கப்பூரர்கள் தங்கள் மெடிசேவ் கணக்குகளில் ஆளுக்கு 450 வெள்ளி வரையிலான ஜிஎஸ்டி பற்றுச்சீட்டைப் பெறுவார்கள்.

1969ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பு பிறந்தவர்களின் மெடிசேவ் கணக்குகளில் 2019ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை ஆண்டுதோறும் 100 வெள்ளி நிரப்பப்படும்.