போலிசாரைத் தாக்கிய பெண்ணுக்குச் சிறை

போலிசார் ஒருவரைச் சுவற்றில் தள்ளி அவரது கழுத்தை இறுகப் பிடித்திருந்த ஒரு பெண்ணுக்கு மூன்று மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரெஷ்மி பி ரெஷ்மி என்ற அந்தப் பெண்ணையும் வேறு சிலரையும் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெரல்ட் சான் வீ மெங் ‘ஆர்ச்சர்ட் டவர்ஸ்’ கடைத்தொகுதியில் விசாரித்துக்கொண்டிருந்தபோது அந்த அதிகாரி திடீரென  தாக்கப்பட்டார்.

ரெஷ்மியை போலிசார் கைது செய்ய முயன்றபோது  அந்தப் பெண் அங்குமிங்கும் தனது கைகளை ஆட்டிக்கொண்டு தப்பிக்க முயன்றார். அத்துடன், மற்றொரு போலிசார் 21வயது சார்ஜண்ட் சுங் யோங் என்னின் இடது கையை ரெஷ்மி தட்டிவிட்டார். சம்பவ இடத்திற்கு மேலும் சில அதிகாரிகள் வந்ததை அடுத்து ரெஷ்மி கைது செய்யப்பட்டார்.

போலிஸ் அதிகாரிகளைத் தாக்கிய குற்றத்திற்காக ஏழு ஆண்டு வரையிலான சிறைத்தண்டனையும் அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம். ரெஷ்மி பெண்ணாக இருப்பதால் அவருக்குப் பிரம்படி தண்டனை விதிக்கப்பட முடியாது.