ஏழு மாணவர்களை மானபங்கம் செய்ததாகக் கூறப்படும் தலைமை ஆசிரியர்

ஏழு உயர்நிலைப் பள்ளி மாணவர்களை அவர்களின் தலைமை ஆசிரியர் ஈராண்டுகளுக்கு முன்னர் வெவ்வேறு சம்பவங்களில் மானபங்கம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  அப்போது மாணவர்களில் மூவருக்கு 13 வயது என்றும் மற்ற மூவருக்கு 14 வயது என்றும் ஒருவருக்கு 15 வயது என்றும் நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

மானபங்கம் செய்ததாகக் கூறப்படும் அந்த 46 வயது ஆடவர் மீது நீதிமன்றத்தில் இன்று11 மானபங்கக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இப்போது அவர் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியாக இல்லை என்பதை அந்தப் பள்ளியின் இணையத்தளம் காட்டுகிறது.

பாதிக்கப்பட்ட மாணவர்களின் அடையாளத்தை ரகசியமாக வைத்திருக்க பள்ளி முதல்வரின் பெயர் வெளியிடப்படவில்லை.  அந்தக் குற்றச்செயல்கள் எப்படி கண்டுபிடிக்கப்பட்டன என்பது குறித்தும் தெளிவான தகவல்கள் கூறப்படவில்லை.

குற்றம் சாட்டப்பட்ட அந்த ஆடவருக்கு 15,000 வெள்ளி பிணை வழங்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் 24ஆம் தேதி அவர் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவேண்டும். பதினான்கு வயதுக்குக் குறைவாக இருக்கும் சிறுவர்களை மானபங்கம் செய்த ஒவ்வொரு குற்றத்திற்காக ஐந்து ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன் பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பொங்கோலில் முதன்முதலாகக் கட்டப்படவுள்ள அறிவார்ந்த வீவக வீடுகளின் தோற்றம். படம்: வீடமைப்பு வளர்ச்சிக் கழகம்

24 Jul 2019

அறிவார்ந்த வீவக வீடுகள்

காணொளியில் காணப்பட்ட முகம்மது ஃபாரிட் முகம்மது சாலேவும் (இடது) முகம்மது நூர் ஃபத்வா மஹ்மூட்டும். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

24 Jul 2019

கார்ப்பரல் கோக் கிணற்றில் தள்ளப்பட்ட சம்பவம்: தொடரும் விசாரணை