ஏழு மாணவர்கள் மானபங்கம்; முதல்வர் மீது குற்றச்சாட்டு

ஏழு மாணவர்கள் மானபங்கம்; முதல்வர் மீது குற்றச்சாட்டு

2 mins read

சிங்கப்பூரில் வெவ்வேறு சம்பவங் களில் ஏழு மாணவர்களை மான பங்கப்படுத்தியதாக பள்ளி முன்னாள் முதல்வர் ஒருவர் மீது நேற்று குற்றம்சாட்டப்பட்டது.

எழுவரில் மூன்று மாணவர் களுக்கு சம்பவம் நடந்தபோது 13 வயது. மற்ற மூவருக்கு வயது 14. ஒருவருக்கு வயது 15.

தற்போது 46 வயதாகும் சந் தேக நபர் பள்ளியின் முதல்வராக இல்லைஎன்பது பள்ளியின் இணையத்தளம் மூலம் தெரிய வருகிறது.

நீதிமன்றத்தில் நேற்று அவர் மீது 11 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால் சந்தேக நபரின் பெயரையும் மாணவர்களின் அடையாளங்களையும் வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மாணவர்களின் நலன் கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள் ளது. சம்பவத்தின்போது ஏழு மாணவர்களும் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார்களா என்பது தெரியவில்லை.

இரண்டு மாணவர்களை அவர் மூன்று முறை மானபங்கப் படுத்தியதாகக் கூறப்படுகிறது.

2017ஆம் ஆண்டில் நடந்த சம்பவத்தில் ஒரு மாணவரின் அரைக்கால் சட்டைக்குள் கையை நுழைத்து அந்தரங்க உறுப்புகளை அவர் தொட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதே பதின்ம வயது மாணவர் களிடம் அடுத்த மாதமே அவர் அதே போன்ற பாலியல் செயலில் இரு முறை ஈடுபட்டாராம்.

2017 அக்டோபர் மாதத்தில் 15 வயது மாணவரையும் மூன்று முறை மானபங்கப்படுத்தியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இம்முறை அந்த மாணவரின் மார்பை அவர் தொட்டதாகக் கூறப்பட்டது. அதே ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி தமது சுட்டுவிரலால் அவர் மாணவரின் தொடைப் பகுதியைத் தொட்டாராம்.

ஒரு வாரம் கழித்து இதே மாணவரிடம் மீண்டும் அவர் அதே பாலியல் செயலில் ஈடுபட்டார் எனக் கூறப்படுகிறது.

2017 அக்டோபர், ஆகஸ்ட் மாதத்துக்கும் இடையே ஐந்து மாணவர்களையும் தலா ஒரு முறை அவர் மானபங்கப் படுத்தியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவங்கள் அனைத்தும் பள்ளியில் நடந்துள்ளன.

ஆனால் மானபங்கச் சம்ப வங்கள் எப்படி வெளியே வந்தது என்பது பற்றிய விவரமில்லை.

இந்த நிலையில் 15,000 வெள்ளி பிணையில் விடுவிக்கப் பட்டுள்ள முன்னாள் பள்ளி முதல்வர், ஜூலை 24ஆம் தேதி மீண்டும் விசாரணையை எதிர் கொள்ளவிருக்கிறார்.

பதினான்கு வயதுக்குக் கீழ் உள்ள மாணவரை மானபங்கப் படுத்தினால் ஒவ்வொரு குற்றச் சாட்டுக்கும் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அப ராதமும் பிரம்படிகளும் விதிக்க முடியும்.