பொங்கோலில் பதுங்கியிருந்த இளையர் கைது

பொங்கோலில் பதுங்கியிருந்த இளையர் கைது

2 mins read
048c0e7d-8165-4016-b0e6-3f2924b87b8c
-

கொள்ளை, வீடு புகுந்து திருடுதல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக நம்பப்படும் சந்தேக நபர் பதுங்கியிருந்த வீட்டை சுற்றிவளைத்த 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பெரும்போராட்டத்துக்குப் பிறகு அவரைக் கைது செய்தனர்.

வாடகை வீட்டில் நால்வருடன் தங்கியிருந்த இளம் கொள்ளையர் மின்பூட்டை திறக்க மறுத்ததால் மின்விநியோகத்தை நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

பொங்கோல் ரோட்டில் உள்ள புளோக் 666பியில் 14வது மாடியில் வீட்டை நேற்று முன்தினம் மாலை 6.00 மணியளவில் அதிகாரிகள் சுற்றி வளைத்தனர்.

வீட்டின் கதவை போலிசார் மாறி மாறித் தட்டினர். ஆனால் ஒரு பதிலும் வரவில்லை. நான்கு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு மின்விநியோகத்தை போலிசார் நிறுத்தினர். இதற்கிடையே இரவு ஒன்பது மணியளவில் ஏராளமான அதிகாரிகள் அங்கு கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போலிஸ் படையை சேர்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட அதி காரிகளும் சிங்கப்பூர் குடி மைத்தற்காப்புப் படையைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகளும் இந்த முற்றுகை நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்று ‌ஷின்மின் டெய்லி வெளியிட்ட செய்தி குறிப்பிட்டது.

சம்பவத்தை நேரில் பார்த்த திரு சென் என்பவர், "போலிசார் கதவைத் தொடர்ந்து தட்டியபோதும் வீட்டில் இருந்த பெண்ணும் ஆணும் கதவைத் திறக்கவில்லை," என்றார்.

இதனால் சில மணி நேரங்களுக்குப் பிறகு மின் விநியோகத்தை போலிசார் நிறுத்தியதாக அவர் கூறினார்.

சிறிது நேரத்தில் இரண்டு ஆண்கள் கதவைத் திறந்து கேள்வியெழுப்பியபோது அதி காரிகள் உடனடியாக செயல்பட்டு வீட்டில் இருந்த ஐவரை மடக்கி கைவிலங்கை மாட்டினர். ஐவரில் ஒருவர் பெண். அதற்குள்ளாக இரவு பத்து மணியாகிவிட்டது.

வீட்டில் பதுங்கியிருந்த 28 வயது இளையர் கைது செய்யப் பட்டதை போலிசார் உறுதி செய்த னர். வீட்டில் புகுந்து திருடிய சந்தேகத்தின்பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக போலிசார் கூறினர்.

அதிகாரிகள் தங்களுடைய கடமையை ஆற்றுவதற்கு இடை யூறாக இருந்ததற்காக மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டதாகவும் போலி சார் தெரிவித்தனர்.

இந்த நடவடிக்கையில் குழந்தை உட்பட மொத்தம் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.

குழந்தையின் வயது ஏழு முதல் எட்டு மாதங்கள் இருக்கலாம் என்றும் கைது செய்யப்பட்டவர்களில் குழந்தை யின் தாயார் இல்லை என்றும் மற்றொரு குடியிருப்பாளரான ஷா யி என்பவர் கூறினார்.

போலிசார் விசாரணை தொடர்கிறது.