முன்னாள் நகர மன்ற மேலாளருக்கான தண்டனையைக் கடுமையாக்க கோரிக்கை

முன்னாள் நகர மன்ற மேலாளருக்கான தண்டனையைக் கடுமையாக்க கோரிக்கை

1 mins read
Google News Preferred Icon

ஊழல் தொடர்பிலான குற்றச்சாட்டுகளை இவ்வாண்டு மார்ச் மாதம் ஒப்புக்கொண்ட முன்னாள் அங் மோ கியோ நகர மன்றத்தின் மேலாளருக்குக் கடுமையான தண்டனையை விதிக்குமாறு அரசு தரப்பு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நகர மன்றத்தின் முன்னாள் மேலாளர் 59 வயது வோங் சீ மெங்குக்குக் குறைந்தது நான்காண்டு, எட்டு மாதங்களுக்கு நீடிக்கக்கூடிய சிறைத் தண்டனையை விதிக்குமாறு கோரியதுடன் $23,400 அபராதத் தொகையையும் விதிக்கச் சொல்லியிருந்தார். நகர மன்ற ஒப்பந்தங்களுக்கு ஏலக் குத்தகை சமர்ப்பித்தவரிடமிருந்து $86,000 மேல் வோங் லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.