13 ஆண்டுகளாக இன்னொருவர் அடையாள அட்டையைப் பயன்படுத்திய ஆடவர்

13 ஆண்டுகளாக இன்னொருவர் அடையாள அட்டையைப் பயன்படுத்திய ஆடவர்

2 mins read

செய்தித்தாளை விநியோகம் செய்பவரைத் தாக்கியதற்காக 13 ஆண்டுகளாக அதிகாரிகளால் தேடப்பட்டு வந்த 58 வயது ஜேம்ஸ் நல்லராஜன் நாயுடு ஆதிசேஷன் வேறு ஒருவரின் அடையாள அட் டையைப் பயன்படுத்தியபோது சட் டத்தின் பிடியில் சிக்கினார்.

நேற்று முன்தினம் நாயுடுவுக்கு ஒன்றரை ஆண்டு சிறைத்தண் டனை விதிக்கப்பட்டது. தொடர்ச் சியாக மற்றொருவரின் அடையாள அட்டையின் பிரதியைப் பயன் படுத்தி மருத்துவச் சேவைகளுக் காகப் பதிவுசெய்து வந்த நாயுடு, தற்செயலாக அடையாள அட்டை யின் உரிமையாளரை ஒரே இடத் தில் சந்திக்க நேரிட்டது.

செங்காங் பொது மருத்துவ மனைக்கு இவ்வாண்டு பிப்ரவரி 25ஆம் தேதியன்று அடையாள அட்டையின் உரிமையாளரான திரு சந்திரன் சின்னதம்பி சென் றிருந்தபோது அங்கு பதிவுசெய்யும் இடத்தில் நாயுடு தம்முடைய அடையாள அட்டையின் பிரதியைப் பயன்படுத்துவதைப் பார்த்துவிட் டார். உடனே ஒரு மருத்துவ ஊழியரிடம் தகவல் கூறி போலி சாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட் டது. ஆள்மாறாட்டம் செய்ததன் தொடர்பில் இரு குற்றச்சாட்டுகளை யும் தாக்குதல் நடத்திய வேறொரு குற்றச்சாட்டையும் நாயுடு நீதிமன் றத்தில் ஒப்புக்கொண்டார்.

நாயுடு 2006ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதியன்று டெப்போ ரோட்டில் உள்ள ஒரு செய்தித்தாள் விநியோகிப்பாளரின் கழுத்தைக் கூர்மையான பிளேடால் வெட்டினார். அப்போது கைதான நாயுடு பிணையில் விடுவிக்கப்பட்ட போது தலைமறைவானார். அப் போது திரு சந்திரனின் அடையாள அட்டை அவர் கையில் கிடைக்க, அதில் தம் முகவரியை ஒட்டித் தனதாகப் பயன்படுத்தி வந்தார் நாயுடு. ஆள்மாறாட்டம் செய்த ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் நாயுடுவுக்கு ஐந்தாண்டு வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.