மருத்துவமனை கழிவறையில் பெண்களைப் படமெடுத்த தாதி

மருத்துவமனை கழிவறையில் பெண்களைப் படமெடுத்த தாதி

1 mins read

ஆண்களும் பெண்களும் பயன் படுத்தக்கூடிய கழிவறையில் ஓர் ஆண் தாதி தன்னுடன் வேலை செய்த பெண் ஊழியர்களை அவர்களின் அனுமதி இல்லாமல் படம் எடுத்ததற்காக நேற்று அவருக்கு 12 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தைப் பாதுகாக்க அந்த 27 வயது ஆடவரின் பெயரும் பணியிடம் பற்றிய விவரங்களும் வெளியிடப்பட வில்லை. தன்னுடன் பணிபுரிந்த பெண் ஊழியர்களை மருத்துவ மனை கழிவறையில் காணொளி களும் புகைப்படங்களும் எடுத்த அந்த ஆண் தாதி, இப்போது மருத்துவமனையில் வேலை செய் யவில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்குத் தெரிவிக் கப்பட்டது.

குற்றம் புரிந்த ஆடவர் சென்ற ஆண்டு மே 11ஆம் தேதியன்று ஒரு 24 வயது பெண் தாதியைப் பின்தொடர்ந்து கழிவறைக்குள் சென்றார்.

அப்போது இரு கழிப்பறை களைப் பிரிக்கும் தடுப்புக்கு அடி யில் தன் கைபேசியை வைத்து ஆடவர் பெண்ணைப் படம்பிடித் தார். இதைப் பார்த்த அப்பெண் உடனே போலிசாரிடம் தகவல் தெரிவித்ததில் ஆடவரின் கைபேசி பறிமுதல் செய்யப்பட்டது.

தன்னுடன் வேலை செய்யும் குறைந்தது மேலும் ஏழு பெண் ஊழியர்களின் படங்களை ஆட வர் பதிவுசெய்திருந்தது அப் போது தெரியவந்தது.

ஆடைகளின்றி பெண்கள் பார்ப்பதற்கு எப்படி இருப்பார்கள் என்னும் ஆர்வக் கோளாற்றில் ஆடவர் இக்குற்றங்களைப் புரிந் ததாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.