போலிசார் ஒருவரை நெஞ்சில் கைவைத்துச் சுவருக்குத் தள்ளி அவரது கழுத்தை இறுகப் பிடித் ததற்காக ஒரு பெண்ணுக்கு மூன்று மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ரேஷ்மி பி ரஸ்மி (படம்) என்ற அந்தப் பெண்ணையும் வேறு சில ரையும் தகராறு தொடர்பில் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெரல்ட் சான் வீ மிங் 'ஆர்ச்சர்ட் டவர்ஸ்' கடைத் தொகுதியில் விசாரித்துக்கொண் டிருந்தபோது ரேஷ்மி அந்த அதி காரியைத் திடீரெனத் தாக்கினார்.
ரேஷ்மியை போலிசார் கைது செய்ய முயன்றபோது ரேஷ்மி வன் முறையில் இறங்கியதாகவும் அடம் பிடித்தவாறு தனது கைகளை அங்குமிங்குமாய் ஆட்டியதாகவும் கூறப்பட்டது.
அத்துடன் அங்கிருந்த மற் றொரு போலிசாரான 21 வயது சார்ஜண்ட் சுங் யோங் என்னின் இடது கையை ரேஷ்மி தட்டிவிட் டார்.
சம்பவ இடத்திற்கு மேலும் சில அதிகாரிகள் வந்ததை அடுத்து ரேஷ்மி கைது செய்யப்பட்டார்.
போலிஸ் அதிகாரிகளைத் தாக் கிய குற்றத்திற்காக ஏழு ஆண்டு வரையிலான சிறைத்தண்டனையும் அபராதம் அல்லது பிரம்படியும் விதிக்கப்படலாம். ரேஷ்மி பெண் ணாக இருப்பதால் அவருக்குப் பிரம்படி விதிக்கப்படவில்லை.

