மின்னிலக்கத்தை நோக்கிச் செல்ல  நிறுவனங்களுக்கு உதவி

நிறுவனங்கள் மின்னிலக்கமய மாகப் புதிய அரசு அலுவலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில்நுட்பம் தொடர் பான 10,000 புதிய வேலைகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. மரினா பே சேன்ட்சில் அமைந்துள்ள மாநாட்டு மண்டபத் தில் நடைபெற்ற இவ்வாண்டின் ‘அறிவார்ந்த தேசம்’ மாநாட்டின் தொடக்கத்தில் தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் இது குறித்து அறிவித்தார்.

இப்புது அலுவலகம் அமைக்கப் படுவதால் அதிவிரைவில் மாறி வரும் தொழில்நுட்பத்துடன் நிறு வனங்கள் சேர்ந்து நடைபோடு வதுடன் பொதுத் துறைக்கும் தனி யார் துறைக்கும் இடையே பங் காளித்துவத்தை இது ஊக்குவிக் கும் என்று குறிப்பிட்டார்.

புதிய அலுவலகம் வளங்களைத் திரட்டியும் துறை சார்ந்த அறிவைப் பகிர்ந்தும் பங்காளித்துவத்தை ஏற் படுத்தும் என்றார் திரு ஈஸ்வரன்.

மின்னிலக்கத் துறை தொடர் பான விவகாரங்களுக்காக இந்த ‘மின்னிலக்கத் துறை சிங்கப்பூர்’ (டிஐஎஸ்ஜி) அலுவலகம், முதல் கட்ட உதவியை நல்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

திறனாளிகளை நியமிப்பது, ஆற்றலை வளர்த்துக்கொள்வது, வெளிநாடுகளில் கால்பதிப்பது போன்றவற்றின் தொடர்பில் இப் புது அலுவலகம் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும்.

‘டிஐஎஸ்ஜி’ ஏற்கெனவே தன் வேலையைத் தொடங்கிவிட்டதாகக் கூறிய அமைச்சர், அது ‘கிராப்’ நிறுவனத்தின் புதிய தலைமையகம் இங்கு தொடங்க ஆதரவு அளித் ததைச் சுட்டினார். புதிய தலைமை யகத்தில் கிட்டத்தட்ட 3,000 ஊழி யர்கள் பணிபுரிவர் என்று கூறப்பட் டது. சிங்கப்பூரின் மின்னிலக்கச் சூழலுக்கு மேன்மேலும் பலன்களை அளிக்கும் இதேபோன்ற திட்டங் கள் பல உள்ளதாகவும் அவர் பகிர்ந்துகொண்டார். இதனால் அடுத்த மூன்று ஆண்டுகளில் 10,000 புதிய வேலைகள் உரு வாகும்.

பொருளியல் வளர்ச்சிக் கழகம், ‘என்டர்பிரைஸ் சிங்கப்பூர்’, தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் ஆகிய அமைப்புகளும் அவற்றைச் சேர்ந்த 45 அதிகாரி களும் புதிய அலுவலகத்தை நிர்வகிப்பர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!