பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி) பற்றுச்சீட்டு, மெடிசேவ் நிரப்புத் தொகை ஆகியவற்றால் கிட்டத் தட்ட 1.7 மில்லியன் சிங்கப்பூரர்கள் பயனடைவர்.
இதன் தொடர்பில் தகுதிபெறும் சிங்கப்பூரர்களுக்குக் குறுந்தக வல்கள், கடிதங்கள் ஆகியவை அனுப்பப்படும் என்று நிதியமைச்சு நேற்று தெரிவித்தது.
இவ்வாண்டு ஜூலை மாதத் திற்கும் நவம்பர் மாதத்திற்கும் இடையே அவர்கள் அந்தச் சலுகைகளைப் பெறுவர்.
முன்னோடித் தலைமுறையின ரும் மெர்டேக்கா தலைமுறையின ரும் ஜூலையில் இச்சலுகைகளைப் பெறுவர்.
அத்துடன் ஆகஸ்ட் மாதத்தில் கிட்டத்தட்ட 1.4 மில்லியன் சிங்கப்பூரர்களுக்கு ரொக்கமாக $300 வரையிலான ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுகள் கிடைக்கும்.
ஆகஸ்ட் மாதத்தில், 65 வயதுக்கு மேற்பட்ட கிட்டத்தட்ட 520,000 சிங்கப்பூரர்கள், தங்கள் மெடிசேவ் கணக்குகளில் ஆளுக்கு $450 வரையிலான ஜிஎஸ்டி பற்றுச்சீட்டைப் பெறுவார் கள்.
1969ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பு பிறந் தவர்கள் அல்லது 50 வயதும் அதற்கு மேலும் உள்ளவர்கள், முன்னோடி அல்லது மெர்டேக்கா தலைமுறைகளுக்கான சலுகை களுக்குத் தகுதிபெறாவிட்டாலும் அவர்களின் மெடிசேவ் கணக்கு களில் 2019ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை ஆண் டுக்கு $100 நிரப்பப்படும்.
ஐந்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்து மெடிசேவ் கணக்கு களில் பணம் நிரப்பும் திட்டம் இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதன்படி இந்த $100 இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு நிரப்பப்படும்.
இதன் தொடர்பில் தாங்கள் எத்தகைய ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு பலன்களுக்குத் தகுதிபெறுகின் றனர் என்பது குறித்து அறிந்திட சிங்கப்பூரர்கள் தங்கள் 'சிங்பாஸ்' பயன்படுத்தி இணையத்தளத்தில் பார்வையிடலாம்.

