போலி கடப்பிதழ்களை அதிகாரிகள் எப்படி கண்டுபிடிக்கிறார்கள்

குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தின் ஐந்தாவது மாடியில் கட்டுப்படுத்தப்பட்ட ஓர் அறை இருக்கிறது. இந்த அறையில் ஆறு உண்மைச் சம்பவக் காட்சிப்பொருட்கள் உள்ளன. ஆனால் அவற்றைப் பொதுமக்களிடம் காட்டமுடியாது. பயிற்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் ஆறு காட்சிப்பேழைகளிலும் உண்மையான கடப்பிதழ்களும் போலி கடப்பிதழ்களும் ஒப்பீட்டுக்காக வைக்கப்பட்டுள்ளன. பயிற்சிபெறாத ஒருவருக்குத் தென்படாத சிறுசிறு வேறுபாடுகளை இவற்றில் காணலாம்.

குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய அதிகாரிகள் ஆறு போலி கடப்பிதழ்களையும் கண்டுபிடித்தனர். ஒரு சம்பவத்தில், வெளிநாட்டுக் கடப்பிதழுக்குள் பதிக்கப்பட்டிருந்த செயற்கை புறஊதா பாதுகாப்பு இழைகள் ( UV security fibres) காட்டிக்கொடுத்தன. மற்றொரு சம்பவத்தில், கடப்பிதழில் இருந்த புகைப்படத்தைச் சுற்றிலும் லேசான வெட்டுக்குறிகளை அதிகாரி கவனித்தார்.

மற்றோர் அதிகாரி, வெளிநாட்டுக் கடப்பிதழில் இருந்த புகைப்படமும் அதிலிருந்த சில்லில் பதிவாகியிருந்த புகைப்படமும் பொருந்தாததைக் கண்டறிந்தார். போலி பயணப் பத்திரங்களைக் கண்டுபிடிப்பது தேசிய பாதுகாப்புக்கு மிகவும் முக்கியம் என்று ஆணையத்தின் உதவி சூப்பரின்டன்ட் கெண்டிஸ் சின் குறிப்பிட்டார். தீய நோக்கமுள்ள பயணிகள் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்படக்கூடாது என்றார் அவர். குடிநுழைவு அதிகாரிகள் சோதனைச்சாவடிகளில் போலி கடப்பிதழ்களை அடையாளம் கண்டுகொள்ள எவ்வாறு பயிற்சி அளிக்கப்படுகிறது என்பது பற்றி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளுக்குச் சென்ற வாரம் பிரத்யேக விளக்கம் அளிக்கப்பட்டது.

போலி பத்திரங்களைத் தயாரிக்கும் கும்பல்கள் முழு கடப்பிதழையும் போலியாகத் தயாரிப்பதற்குப் பதிலாகக் கடப்பிதழின் விவரக்குறிப்புப் பக்கத்திலுள்ள பாதுகாப்பு அம்சங்களில் மோசடி செய்வது எளிதாக இருப்பதாக ஆணையத்தின் அடையாள உறுதிப்பாடு, ஆவணப் பகுப்பாய்வு பிரிவின் பயிற்சியாளரான 30 வயது ஏஎஸ்பி சின் கூறினார்.

“(கண்டுபிடிக்கப்பட்ட சம்பவங்களில்) பெரும்பாலானவை அடையாள மோசடியுடன் தொடர்புடையவை – பற்பல அடையாளங்கள் அல்லது ஆள்மாறாட்டம். கடப்பிதழ் மோசடி குறைந்து வருகிறது,” என்றார் அவர்.

சோதனைச்சாவடிகளில் கண்டுபிடிக்கப்படும் சந்தேகத்திற்குரிய பயணப் பத்திரங்களை ஆராய்வதும், போலிப் பத்திரங்களிலும் மோசடி முறைகளிலும் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிப்பதும், குடிநுழைவு அதிகாரிகளுக்காகப் பயிற்சிகள் நடத்துவதும் இவரது பொறுப்புகள்.

கடந்த 2016ஆம் ஆண்டுக்கும் சென்ற ஆண்டுக்கும் இடையில், ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 85 போலி மற்றும் மோசடி செய்யப்பட்ட கடப்பிதழ்களை ஆணையம் கண்டுபிடித்தது. அதோடு, கிட்டத்தட்ட 1,600 அடையாள மோசடி சம்பவங்களையும் கண்டுபிடித்தது. ஆனால், சிங்கப்பூர் கடப்பிதழ்களில் மோசடி செய்ய மிகச்சிலரே முயற்சி செய்வதாக உள்துறை அமைச்சர் கா.சண்முகம் சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 2015ஆம் ஆண்டுக்கும் 2017ஆம் ஆண்டுக்கும் இடையில் போலி சிங்கப்பூர் கடப்பிதழ்களின் தொடர்பில் ஆறு வழக்குகளை ஆணையம் பதிவு செய்தது. உரிமையாளரின் விரல் ரேகைகள் போன்ற அடையாளங்களைக் கொண்ட சிறிய சில்லு பதிக்கப்பட்ட அங்க அடையாளக் கடப்பிதழ்கள் 2006ல் சிங்கப்பூரில் அறிமுகமாயின. பிறகு 2017ல் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டன.

சென்ற ஆண்டு, மூன்று போலி சிங்கப்பூர் கடப்பிதழ்களும் ஓர் இந்தியக் கடப்பிதழும் வைத்திருந்த பாகிஸ்தானியரை தாய்லாந்து அதிகாரிகள் பேங்காக்கில் கைது செய்தனர். ஈரானியப் போலி பத்திரத் தயாரிப்பு வல்லுநருக்கும் இச்சம்பவத்திற்கும் தொடர்பிருப்பதாகத் தாய்லாந்து அதிகாரிகள் கூறினர். அந்த மோசடி கும்பல் 2016ல் முறியடிக்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில், பெரும்பாலான நாடுகள் பாலிகார்பனேட்டில் செய்யப்பட்ட விவரக்குறிப்பு பக்கங்களுடன் இயந்திரங்களால் வாசிக்கப்படும் கடப்பிதழ்களை அறிமுகப்படுத்தி வருவதால், அவற்றில் மோசடி செய்வது மிகவும் சிரமம் என்றார் ஏஎஸ்பி சின்.

சிங்கப்பூரில், போலி ஐரோப்பியக் கடப்பிதழ்களை அதிகாரிகள் அடிக்கடி கண்டுபிடிப்பதாகவும், ஐரோப்பிய நாடுகளுக்கு ஏராளமானோர் அடைக்கலம் தேடிச் செல்வதுடன் இதற்குத் தொடர்பிருப்பதாக அவர் நம்புகிறார். குடிநுழைவு அதிகாரிகள் அனைவரும் மூன்று நாள் அடிப்படை பத்திரப் பரிசோதனை பயிற்சி பெறுகின்றனர். கடப்பிதழ்களில் காணப்படும் முதல் இரண்டு நிலைகளின் பாதுகாப்பு அம்சங்களை அடையாளம் காண அவர்களுக்குக் கற்றுத் தரப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுக்கு, சிறப்புக் கருவிகளுடன் மூன்றாம் நிலை பாதுகாப்பு அம்சங்களை அடையாளம் காண கற்பிக்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!