சிறிய, நடுத்தர நிறுவனங்கள் இந்த ஆண்டின் மூன்றாவது, நான்காவது காலாண்டுகளில் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் குறித்து பொதுவாக நம்பிக்கையுடன் உள்ளன.
இந்த நிறுவனங்களிடையே, தொழில் நம்பிக்கை அளவு, இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் 50.8 புள்ளிகள் ஆக இருக்கிறது. முதல் காலாண்டில் இது 50.4 ஆக இருந்தது. இந்தக் குறியீட்டில் 50 புள்ளிகளைத் தாண்டினால் நிறுவனங்கள் நம்பிக்கையுடன் உள்ளன எனப் பொருள்படும். எஸ்பிஎஃப்=எக்ஸ்பிரியன் சிறிய, நடுத்தர நிறுவன அட்ட வணை இந்த விவரங்களைத் தெரிவிக்கிறது. இது ஏப்ரல் 15 முதல் மே 24 வரை, 3,600 சிறிய, நடுத்தர நிறுவனங் களிடம் பல தகவல்களையும் திரட்டி உருவாக்கப்பட்டது.

