நன்னடத்தை கண்காணிப்பில் இளையர்

நன்னடத்தை கண்காணிப்பில் இளையர்

1 mins read
Google News Preferred Icon

பதின்ம வயது இளையர் தன் கைப்பேசியைப் பயன்படுத்தி அவரது பள்ளி ஆசிரியர்களில் குறைந்தது இருவரை ஆபாசமாகப் படம் எடுத்தார். மேலும் தனது வீட்டில் குளித்துக்கொண்டிருந்த தனது சகோதரியின் தோழியையும் படம்பிடித்தார். இந்தக் குற்றங்களுக்காக அந்தப் 17 வயது பையன், இரண்டாண்டு நன்னடத்தைக் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளார்.

புகைப்படச் சாதனம், இணைய இணைப்பு உள்ள கைத்தொலைபேசிகளை அதிகாரியின் அனுமதியின்றி அவர் பயன்படுத்த முடியாது. இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை வீட்டுக்குள்ளேயே இருக்கவேண்டும். 200 மணி நேரம் சமூக சேவை ஆற்ற வேண்டும். அந்த இளையர், மூன்று குற்றச்சாட்டுகளின் பேரில் மே 8ஆம் தேதி குற்றத்தை ஒப்புக்கொண்டார். குற்றச்செயல்கள் சென்ற ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 22 வரையும் சென்ற ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி நடந்தாக தெரிவிக்கப்பட்டது.