சிங்கப்பூர் நாணய ஆணையம் (மாஸ்) மார்ச்சில் முடிந்த நிதி ஆண்டில் $19.2 பில்லியன் நிகர லாபத்தை ஈட்டி இருக்கிறது. அந்த ஆணையத்தின் முதலீட்டு வருமானம் அதிகமாக இருந்தது. நாணய மதிப்பும் வருவாயைப் பெருக்க உதவியது. இந்த நாணயத்தின் 2018-2019 நிதி ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில் இந்த விவரங்கள் அடங்கி இருக்கின்றன.
இதனிடையே, இந்த மத்திய வங்கியின் வருடாந்திர அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ரவி மேனன், 2018-19 நிதியாண்டில் கிடைத்துள்ள முதலீட்டு வருவாய் ஒப்பிட்டு பார்க்கையில் அதிகம் என்றார்.

