நெக்ஸ் கடைத்தொகுதியில் நான்காவது மாடியில் கூட்டம் அதிகமாக இருந்த பொது வழியில் மின்ஸ்கூட்டரில் வந்த உணவு விநியோக ஊழியர் ஒருவர், கைக்குழந்தை மீது மோதிவிட்டார். அந்த 3 வயது குழந்தைக்குத் தலையில் லேசான காயம் ஏற்பட்டது.
சிராங்கூன் சென்டரில் உள்ள அக்கடைத் தொகுதியில் மார்ச் 18ஆம் தேதி கண்மூடித்தனமாக மின்ஸ்கூட்டரை ஓட்டி அதன்மூலம் அந்தக் குழந்தைக்குக் காயத்தை ஏற்படுத்தியதாக நியோ ஜியா மிங், 20, என்ற அந்த உணவு விநியோகிப்பாளர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். வழக்கை நீதிபதி ஜூலை 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். நன்னடத் தைக் கண்காணிப்பின் கீழ் வைக்க நியோ பொருத்தமான வரா என்பதைத் தீர்மானிக்க அறிக்கையைத் தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

