ஊழியர்கள் ஐவருக்கு தட்டம்மை

ஊழியர்கள் ஐவருக்கு தட்டம்மை

1 mins read

இரண்டு வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் தங்கியுள்ள பங்ளாதேஷ் ஊழியர்கள் ஐவருக்குத் தட்டம்மை கண்டது.

தோ குவான் ரோட்டில் இருக்கும் தோ குவான் விடுதியில் இரண்டு ஊழியர்களும் ஓல்டு சுவா சூ காங் ரோட்டில் இருக்கும் சுங்கை தெங்கா விடுதியில் மூன்று பேரும் பாதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு நேற்று உறுதிப்படுத்தியது. சூழ்நிலையை அமைச்சு அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது. தட்டம்மை பரவியதாகத் தெரிய வில்லை என்று அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

தட்டம்மை ஏற்பட்ட ஊழியர்கள் குணமடைந்துவிட்ட தாகவும் அவர் கூறினார். விடுதிகள், முதலாளிகள், வெளி நாட்டு ஊழியர்கள் அனைவரிடத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சு தெரிவித்துள்ளது.