காலணிகள் திருடுவது போல் காட்சி: கிராப் விசாரணை

காலணிகள் திருடுவது போல் காட்சி: கிராப் விசாரணை

1 mins read
d211e93e-089e-4ea3-8347-cc82c190f322
படம்: கிரேஸ் லிம்/ஃபேஸ்புக் -
Google News Preferred Icon

கிராப்ஃபுட் உணவு விநியோக ஊழியர் ஒருவர் அடுக்குமாடி வீட் டிற்கு வெளியே இம்மாதம் 20ஆம் தேதி ஒரு ஜோடி காலணியைத் திருடுவதைப்போன்று காட்டிய ஒரு காணொளி இணையத்தில் பதிவேற் றப்பட்டது.

இது பற்றி புலன்விசாரணை நடப்பதாக கிராப் நிறுவனம் தெரி வித்துள்ளது. அந்தக் காணொளி ஃபேஸ்புக்கில் 29,000க்கும் அதிக தடவை பார்க்கப்பட்டு இருக்கிறது.

இந்த விவகாரம் பற்றி போலிசிடமும் கிராப் நிறுவனத்திடமும் தெரி யப்படுத்தப்பட வேண்டும் என்று இணையத்தில் பலரும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

உணவை வைத்து எடுத்து செல்லக்கூடிய பையில் அந்தக் காலணிகளை விநியோகிப்பாளர் வைத்ததால் உடல்நலத்திற்குக் கேடு ஏற்படக்கூடும் என்றும் சிலர் கவலை தெரிவித்தனர்.

இந்த விவகாரம் பற்றி தனக்குத் தெரியும் என்றும் இது பற்றி புலன் விசாரணை நடப்பதாகவும் கிராப் நிறுவனம் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

பிரத்தியேகப் படச்சாதனம் மூலம் தெரியவந்த காட்சி. படம்: கிரேஸ் லிம்/ஃபேஸ்புக்