பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பு மறுஆய்வு

பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பு மறுஆய்வு

2 mins read

இவ்வாண்டின் பொருளியல் வளர்ச்சி 1.5 விழுக்காட்டில் இருந்து 2.5 விழுக்காட்டாக இருக்கும் என்ற முன்னுரைப்பை சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் மறுஆய்வு செய்து வருகின்றன.

சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தகப் போரால் முதலீடுகள், வர்த்தகம், உற்பத்தித் துறை ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளது என்று நாணய ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ரவி மேனன் தெரிவித்துள்ளார்.

அவ்விரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் பதற்றத்தால் உலகளாவிய பொருளியல் வளர்ச்சியும் மந்தமடைந்தது. இதன் காரணமாக, முந்தைய பத்தாண்டுகளில் இல்லாத வகையில் இவ்வாண்டின் முதல் காலாண்டில் சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி 1.2% என மிகக் குறைந்த அளவில் இருந்தது.

இந்நிலையில், ஆண்டு அடிப்படையில் பார்க்கையில் இவ்வாண்டின் இரண்டாவது காலாண்டில் பொருளியல் வளர்ச்சி அதை

விடக் குறைவாக இருக்கும் என்று ஆணையம் எதிர்பார்க்கிறது.

"சிங்கப்பூர் பொருளியல் கடுமையான சூழலை எதிர்கொண்டு வருகிறது. அதே நேரத்தில், அது நல்ல நிலையிலேயே உள்ளது," என்று திரு மேனன் கூறினார்.

விழிப்பாக இருக்கவேண்டும் என்றபோதும் அச்சப்படத் தேவை இல்லை என்றார் அவர்.

உலகளாவிய வர்த்தகச் சூழல் மோசமடைந்து வரும் நிலையில் சிங்கப்பூர்ப் பொருளியல் 2019 மூன்றாவது காலாண்டில் சிறிய அளவிலான பொருளியல் மந்தநிலையை எதிர்கொள்ளக்கூடும் என்று மேபேங்க் கிம் எங் ஆய்வு முன்னதாகக் கூறியிருந்தது.

அமெரிக்கா-=சீனா இடையிலான வர்த்தகப் பூசல், ஏற்று

மதியை அதிகம் நம்பியிருக்கும் சிங்கப்பூர் பொருளியல் மீது தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இவ்வாண்டில் நாட்டின் பொருளியல் 1.3% வளர்ச்சி காணும் என மேபேங்க் எதிர்பார்க்கிறது. முன்னதாக, அது 1.6% வளர்ச்சி காணும் எனக் கணித்திருந்தது.

ஏற்றுமதியில் ஏற்பட்ட சரிவால் உற்பத்தித் துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் சிங்கப்பூர் உற்பத்தித் துறையின் வளர்ச்சி சுருங்கியது. குறிப்பாக, உற்பத்தித் துறையில் 27% பங்களித்து வரும் மின்னணுவியல் துறை வெகுவாக பாதிக்கப்பட்டு

உள்ளது.

பொருளியல் மந்தநிலை ஏற்படும் பட்சத்தில், மத்திய வங்கி தனது நாணயக் கொள்கையைத் தளர்த்தும் வாய்ப்பு அதிகரிக்கும். கடந்த ஏப்ரலில் சிங்கப்பூர் மத்திய வங்கி தனது நாணயக் கொள்கையில் எந்த மாற்றமும் செய்ய

வில்லை.

மத்திய வங்கியின் வருடாந்திர அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அப்போது செய்தியாளர்

களிடம் பேசிய திரு ரவி மேனன், "நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் இவ்வாண்டிற்கான பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பை மறுஆய்வு செய்து வருகின்றன. இருந்தாலும், அது தற்போதைய 1.5%-=2.5% என்ற முன்னுரைப்பைக் காட்டிலும் குறைவாக இருக்கும் வகையில் திருத்தப்படுமா என இப்போது சொல்ல முடியாது," என்றார்.